டுகாட்டி டயாவெல் டீசல் பைக் இந்தியாவில் ரூ.19.92 லட்சத்திற்கு அறிமுகம்

Written By:

மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் உலகளவில் அதிக வரவேற்பு பெற்ற டுகாட்டி நிறுவனம், புகழ்பெற்ற ஆடைவடிவமைப்பு நிறுவனமான டீசல் பிராண்டுடன் இணைந்து புதிய டயாவெல் டீசல் மோட்டார் சைக்கிளை தயாரித்து வந்தது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் டயாவெல் டீசல் பைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் (666) மட்டுமே விற்பனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

பொதுவாக டுகாட்டி நிறுவனத்திலிருக்கும் பைக்களுக்கான எஞ்சின் திறனை தான் டயாவெல் மோட்டார் சைக்கிளும் பெற்றுள்ளது.

டயாவெல் டீசல் பைக்கில் 1198 சிசி L- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. இது 160 பி.எச்.பி பவர் மற்றும் 130.5 என்.எம் திறனை வெளிப்படுத்தும்.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

அடிப்படையில் ஸ்போர்ட்ஸ் மாடலாக தயாரிக்கப்பட்டுள்ள பைக்கிற்கான தோற்ற அமைப்பில், டீசல் நிறுவனத்துடன் இணைந்து பல மாற்றங்களை டுகாட்டி தந்துள்ளது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

முற்றிலும் எஃகு உலோகத்தால் உருவாக்கப்பட்டு, பைக்கின் உள்கட்டமைப்பு முழுவதும் வெளியில் தெரியும்படியான வடிவம் பெற்றுள்ளது. இந்த தோற்றம் டயாவெல் டீசல் பைக்கிற்கு ஒரு தனித்துவத்தை தருகிறது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

அதேபோல சிவப்பு நிறத்தை மையமாக வைத்து பைக்கின் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. பைக்கின் முத்திரை, சங்கிலி இணைப்புகள், ஸ்பீடோமீட்டரின் எல்.இ.டி திரை, பிரேக் காலிபர் உட்பட பல பாகங்கள் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டயாவெல் டீசல் பைக்கின் சைலன்சரும் கவனமீர்க்கிறது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

பைக்கிற்கான முத்திரையில் ஆங்கில எழுத்தான மூன்று 'D' இடம்பெற்றுள்ளன. இதன் விரிவாக்கம் பைக்கின் நிறுவனமான டுகாட்டி (Ducati),மாடல் (Diavel) மற்றும் பங்குதாரர் நிறுவனம் (Diesel) ஆகியவற்றை குறிக்கிறது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

ஃபேஷன் மற்றும் தற்போதைய டிரெண்டை கருத்தில் கொண்டு டயாவெல் டீசல் மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டுகாட்டி இந்திய நிறுவனத்திற்கான நிர்வாக இயக்குநர் ரவி அவலூர் கூறியுள்ளார். நிச்சயம் டயாவெல் டீசல் உலகளவில் வரவேற்பு பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டயாவெல் டீசல் பைக் மாடலுக்கு முன்பு 2012ம் ஆண்டில் டுகாட்டி நிறுவனம் மான்ஸ்டர் டீசல் என்ற பெயரில் ஒரு மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. அதுவும் குறிப்பிடப்பட்ட் என்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

டுகாட்டி டயாவெல் டீசல் பைக் விற்பனைக்கு அறிமுகம்

டயாவெல் மோட்டார் சைக்கிளுக்காக மூன்கூடியே ஆர்டர் தருபவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பைக்குகள் நேரடியாக விநியோக்கப்படும் என டுகாட்டி அறிவித்துள்ளது.

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati has launched the limited edition of its sports cruiser, the Diavel Diesel. Read to know all the details about the motorcycle.
Story first published: Thursday, March 30, 2017, 11:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark