இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் யெஸ்டி பைக்குகள்... மஹிந்திரா செய்யும் அசராத முயற்சி..!!

Written By:

இந்தியாவில் முன்னணி பைக்காக வலம் வந்த யெஸ்டி மோட்டார்சைக்கிள் மீண்டும் இந்தியாவில் வருவது உறுதியாகி உள்ளது.

தற்போது யெஸ்டி பைக்குகளை பிரபலமாக்க அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

யெஸ்டி பைக்குகள் இந்தியாவில் 1960 முதல் 1996 வரை மிக முக்கிய பிராண்டாக இந்தியர்கள் மத்தியில் இருந்தது.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

2 ஸ்ட்ரோக் எஞ்சின் தொழில்நுட்பம் இந்திய சந்தைக்கு இனி தேவையில்லை என்று ஆனவுடன் யெஸ்டி பைக்குகளை தயாரித்து வந்த ஐடியல் ஜாவா நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியது.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

இருந்தாலும் இந்தியாவில் பலரிடம் ஜாவா 350 மாடல் பைக்குகள், யெஸ்டி ரோடுகிங் உள்ளிட்ட பல மாடல்களுக்கு தனியான வரவேற்பு இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

மஹிந்திரா நிறுவனம் ஜாவா மற்றும் பிஎஸ்ஏ நிறுவனங்களை சமீபத்தில் கைப்பற்றியது. இப்போது மஹிந்திராவின் இருசக்கர வாகன பிரிவு தற்போது யெஸ்டி நிறுவனத்தின் இணையதளத்தை வெளியிட்டுள்ளது.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

செயல்பாட்டு வந்துள்ள இந்த இணையதளம் http://yezdi.com என்ற பெயரில் இயங்கி வருகிறது. 1960 முதல் யெஸ்டி பெயரில் வெளியான முந்தையை பைக்கின் வரைபடங்கள் முகப்பு பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

யெஸ்டி ரோகிங், யெஸ்டி சி.எல் 2, யெஸ்டி கிளாசி, யெஸ்டி மோனோ ஆர்ச், யெஸ்டி டீலக்ஸ் என அனைத்து மாடல்களில் வரைப்படங்களும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

இணையதளங்களை தொடர்ந்து யெஸ்டி பைக்கில் 200சிசி திறன் கொண்ட கிளாசிக் மாடல் மோட்டார் சைக்கிள்களை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டம் தீட்டியுள்ளது.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

இதில் முதற்கட்டமாக யெஸ்டி பெயரில் தயாராகும் புதிய மாடல் பைக்குகள் 2018 டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

பிறகு அதே ஆண்டு இறுதியில் நவீன தலைமுறைக்கு ஏற்றவாறு மஹிந்திரா தயாரிக்கும் யெஸ்டி பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.

யெஸ்டி பைக்குகளை மீட்டெடுக்க களமிறங்கிய மஹிந்திரா..!!

மேலும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மஹிந்திராவின் ஜாவா மாடல் பைக்குகளும் இந்தியாவில் களமிறங்கும்.

யெஸ்டி. ஜாவா பைக்குகள் மஹிந்திராவின் பித்தம்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தயாராகவுள்ளது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil- Mahindra Launches New Yesdi BIkes With Current Modification. Click for Details...
Story first published: Saturday, July 22, 2017, 15:18 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark