மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியில் குதித்த மஹிந்திரா.... கலக்கத்தில் டிவிஎஸ், பஜாஜ் நிறுவனங்கள்..!!

Written By:

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம், இந்திய சாலைகளுக்கு ஏற்ற புதிய மின்சார ஸ்கூட்டரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

குஸ்டோ பிளாட்ஃபாரமின் கீழ் தயாரிக்கப்படும் இந்த ஸ்கூட்டருக்கான ஆயத்த பணிகளை மஹிந்திரா தொடங்கியுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

ஆட்டோகார் பிரோஃபெஷனல் இணையதளம், மஹிந்திரா புதிய பிளாட்ஃபாரமின் கீழ் தயாரிக்கும் இந்த மின்சார ஸ்கூட்டருக்கான செய்தியை வெளியிட்டுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

மேலும், மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் மின்சார ஸ்கூட்டருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி குழு குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

அதில், ஜாவா பிராண்டிற்காக பணியாற்றிய ஆராய்ச்சி குழுவினர் தான் மஹிந்திராவின் மின்சார ஸ்கூட்டருக்கான ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார்.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் வேர்யண்ட் இருக்கும் எனவும், அது சீக்கிரமே மக்களின் பார்வைக்கும் வரும் எனஅவர் மேலும் கூறியுள்ளார்.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

2016 அக்டோபர் மாதத்தில் பியூஜியோட், கிளாசிக் லெஜண்ட்ஸ், மஹிந்திரா ஆகியவை இணைந்து செயலாற்ற உள்ளதாக மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மஹிந்திராவின் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் குஸ்டோ பிளாட்ஃபாரமின் கீழ் இந்த மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கிறது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

டிவிஎஸ் உட்பட இந்தியாவில் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியில் கவனம் வைக்க, அவற்றுடன் மஹிந்திராவும் இணைந்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக, பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

இதற்கான தயாரிப்பு டிசம்பர் 2017 அல்லது ஜனவரி 2018ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் இவற்றுடன் ஹீரோவும் மின்சார ஸ்கூட்டர் தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

இந்திய ஆட்டோ துறையின் ஜாம்பவனான பஜாஜ், மின்சார வாகனங்களை பிரத்யேகமாக தயாரிக்க அர்பனைட் என்ற பிராண்டையே உருவாக்கியுள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

இதன் மூலம் பேட்டரிகளால் மின்சார ஆற்றல் பெற்று இயங்கும் பஜாஜின் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்படும்.

பூனேவை சேர்ந்த டோர்க் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் வடிவமைப்பில் ஆர்வமாக உள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன ஆற்றல் மின்சாரத்திற்கு மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

இதற்கு பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இசைவு தெரிவித்துள்ள நிலையில், மஹிந்திராவும் இணைந்திருப்பது மின்சார வாகன கட்டமைப்பிற்கு வலு சேர்பதாக அமைந்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

இன்னும் தொடங்கவே ஆரம்பிக்கவில்லை, ஆனால் இந்தியாவில் அதற்குள் மின்சார வகான துறை தற்போதே சுடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கால்பதிக்கும் மஹிந்திரா..!!

இந்தியாவில் மின்சார வாகன கட்டமைப்பில், வாகன நிறுவனங்களின் அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra is developing an all-new electric scooter for the Indian market. Click for Details...
Story first published: Tuesday, September 26, 2017, 13:13 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark