புதிய தோற்றத்தில் மாடிஃபை செய்யப்பட்ட பஜாஜ் டோமினார்400 பைக்!

Written By:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் பல்சர் என்ற பைக் மாடல் மூலமாக கோலோய்சியே வந்தது. பிறகு கேடிஎம், ராயல் என்ஃபீல்டு என புதிய வகை மாடல்களின் அறிமுகத்தால் பல்சர் விற்பனை தடுமாறியபோது. தனது இடத்தை தக்கவைக்க பஜாஜ் நிறுவனம் கொண்டுவந்த மாடல் தான் டோமினார்400.

மாடிஃபை செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட டோமினார்400, கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும், குறைந்த விலைக்கு மிகுந்த சிறப்புகள் பொருந்திய பைக்காக மக்களிடம் அபிமானத்தை பெற்று வருகிறது.

மாடிஃபை செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக்!

சென்னையை சேர்ந்த மாடிஃபிகேசன் நிறுவனத்தார், டோமினார்400 பைக்கை தற்போது மேலும் மெருகேற்றியுள்ளனர். முற்றிலும் மாற்றியமைக்கப்படாவிட்டாலும் தோற்றத்தில் மட்டும் கவர்ச்சியை கூட்டியுள்ளனர்.

மாடிஃபை செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக்!

டோமினார்400க்கு புதிய பெயிண்டிங் தந்துள்ளனர். பொதுவாக டோமினார் வெள்ளை, மிட்நைட் ப்ளூ மற்றும் டிவைலைட் பிளம் என 3 வண்ணங்களில் தான் கிடைக்கிறது. ஆனால் இதனை மெட்டாலிக் புளூ என்ற வண்ணம் தந்து அட்டகாசப்படுத்தியுள்ளனர்.

மாடிஃபை செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக்!

இதன் சீட்டும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது, முகப்பு விளக்கு யூனிட் முழுவதும் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரேக் காலிபருக்கு சிவப்பு நிறத்தில் ஷேட் தந்துள்ளனர். பின்புறம் உள்ள எல்ஈடி விளக்குக்கு, கருப்பு நிற ஷேட் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதன் வெளிப்புறம் புதிய லுக் பெற்றுள்ளது.

மாடிஃபை செய்யப்பட்ட பஜாஜ் டோமினார் 400 பைக்!

டாமினோரின் வெளிப்புறம் மட்டுமே மெருகேற்றபட்டுள்ளது. பஜாஜ் டோமினார்400-ல், சிங்கிள் சிலிண்டர் கொண்ட 373சிசி லிக்விட் கூல்டு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 35 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 

English summary
This modified Dominar 400 is wrapped in new blue metallic colour scheme, which looks stunning on the motorcycle. The seats, headlamp assembly and brake calipers also get new shades.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark