புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

Written By:

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர்-1 பிராண்டு ஹோண்டா ஆக்டிவா. இந்த ஸ்கூட்டர் 110சிசி மற்றும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் எஞ்சின் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு அம்சத்திற்கு தக்கவாறு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.52 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும், எல்இடி பொசிஷன் லைட்டுகளும் இப்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதனால், முகப்புக்கு கூடுதல் வசீகரம் கிடைத்துள்ளது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

இந்த ஸ்கூட்டரில் புதிய மொபைல் சார்ஜர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் அலாய் வீல்கள் மற்றும் டிரம் பிரேக்குகள் கொண்ட நடுத்தர ரக மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வெள்ளை, நீலம், கருப்பு, சிவப்பு உள்ளிட்ட நிறங்கள் தவிர்த்து, மேட் க்ரஸ்ட் மெட்டாலிக் என்ற புதிய வண்ணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்- விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.56,954 விலையிலும், அலாய் வீல்களுடன் டிரம் பிரேக் மற்றும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ.58,900 விலையிலும், அலாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் மற்றும் சிபிஎஸ் பிரேக் நுட்பம் கொண்ட மாடல் ரூ.61,362 விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

புதிய அப்ரிலியா எஸ்ஆர்150 ரேஸ் எடிசன் மாடல் படங்கள்!

புதிய அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அறிமுக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பிரத்யேக படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
New Honda Activa 125 With BS IV Engine Launched in India.
Story first published: Thursday, February 9, 2017, 18:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark