புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

Written By:

பல புதிய சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே படங்களும், விபரங்களும் வெளியாகி உள்ளன.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

டூரிங் வகை மோட்டார்சைக்கிள்களில் உலக அளவில் பிரபலமானது ஹோண்டா கோல்டுவிங். இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகமானதும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்திலும் இந்த மோட்டார்சைக்கிள் கூடுதல் அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

முற்றிலும் புதிய முக அமைப்பை பெற்றிருக்கிறது புதிய ஹோண்டா கோல்டுவிங். பிஎம்டபிள்யூ மோட்டோராட் கே சீரிஸ் மோட்டார்சைக்கிள்களின் சாயல் தெரிகிறது.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

உறுதித்தன்மை அதிகமுடைய இலகுவான உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், தற்போது விற்பனையில் இருக்கும் கோல்விங் மோட்டார்சைக்கிளைவிட எடை குறைவானதாக இருக்கும்.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளில் புதிய ஸ்டீயரிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், முன்புறத்தில் சாதாரண ஃபோர்க்குகளுக்கு பதிலாக புதிய சஸ்பபென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், முன்பைவிட மிக சொகுசான டூரிங் மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

டேஷ்போர்டு அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கிறது. தவிர்த்து, எல்சிடி திரையுடன் கூடிய சிறிய அளவிலான மின்னணு தகவல் பலகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் உள்ள பெரிய திரையை கட்டுப்படுதத்துவதற்கு விசேஷ கட்டுப்பாட்டு பலகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிளில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு வரும் என்பது தகவல். ஆனால், சில ஸ்பை படங்களில் க்ளட்ச் லிவர் இருப்பது போலவும், சிலவற்றில் இல்லாதது போலவும் இருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.

புதிய ஹோண்டா கோல்டுவிங் மோட்டார்சைக்கிள் விபரங்கள் கசிந்தன!

மொத்தத்தில் இந்த பிரம்மாண்ட மோட்டார்சைக்கிளின் புதிய முக அமைப்பு இளைய சமுதாயத்தினரையும் கவர்ந்து இழுக்கும் என்று தெரிகிறது. பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருப்பதால், டூரிங் வகை மோட்டார்சைக்கிள் விரும்பிகளின் கவனத்தை நிச்சயம் புதிய ஹோண்டா கோல்டுவிங் ஈர்க்கும் என்று நம்பலாம்.

Source: Oliepeil

English summary
Japanese two-wheeler manufacturer Honda is expected to reveal the new Gold Wing in October 2017. But ahead of that, the photos of the motorcycle have been leaked on the internet.
Story first published: Tuesday, September 26, 2017, 13:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark