கலக்கலான புதிய வண்ணத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

Written By:

புதிய வண்ணத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

விற்பனையில் இந்தியாவின் டாப்-10 இருசக்கர வாகனங்களில் குறிப்பிடத்தக்க இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் இருந்து வருகிறது. ஒரு மில்லியன் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டுகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டின் 100சிசி மாடலிலும் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் புதிய வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டில் இருக்கும் 99.7சிசி எஞ்சின் பாரத் ஸ்டேஜ்-4 மாசு அம்சத்திற்கு இணையான தரத்தில் எஞ்சின் இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 4.3 பிஎச்பி பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

Recommended Video
[Tamil] TVS Jupiter Classic Launched In India - DriveSpark
 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

கியர்லெஸ் மாடல் என்பதும் ஓட்டுவதற்கு எளிமையான மாடலாக இருக்கிறது. இந்த மொபட் லிட்டருக்கு 67 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும்.

 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

இந்த மொபட் ஓட்டுபவருக்கும், பின்னால் அமருபவருக்கும் தனித்தனி இருக்கைகளை கொண்டிருப்பதால், சவுகரியமான பயணத்தை வழஹ்குகிறது. பின் இருக்கையை கழற்றி மாட்டும் வசதியும் உண்டு.

 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சிவப்பு, பச்சை, சாம்பல், நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களில் புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 கிடைக்கும் என்பதோடு, காப்பர் ஷைன் என்ற வண்ணத்திலும் கிடைக்கும்.

 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

இந்த மொபட் 80 கிலோ எடை கொண்டிருப்பதோடு, 130 கிலோ வரை எடை சுமக்கும் திறன் பெற்றிருக்கிறது. இந்த மொபட்டில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஸ்பிரிங் கொண்ட ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் அறிமுகம்!

புதிய டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் ரூ.32,209 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இந்த புதிய வண்ணம் வரவேற்கத்தக்க விஷயமாக கூறலாம்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company has launched the new XL 100 Copper Shine colour in India. The new XL 100 Copper Shine is priced at Rs 32,209 ex-showroom (Delhi).
Please Wait while comments are loading...

Latest Photos