2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்- முழு விபரம்!

Written By:

யமஹா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் எம்டி-07. பல வெளிநாடுகளில் இந்த பைக் விற்பனையில் கலக்கி வருவதுடன், இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் மாடல்.

2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்!

விற்பனையில் முக்கியத்துவம் பெற்ற இந்த மாடலை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது யமஹா. மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி மூலமாக வெளி உலகுக்கு அறிமுகமாகி இருக்கும் இந்த புதிய மாடலின் சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்லைட், டெயில் லைட்டுகள், வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன. அகலமான இருக்கை அமைப்பு ஓட்டுனருக்கு சவுகரியத்தை அதிகரிக்கும்.

2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்!

அதிர்வுகளை வெகுவாக குறைக்கும் விதத்தில், அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சஸ்பென்ஷன் இருப்பதால், மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும்.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்!

யமஹா எம்டி-07 பைக் டார்க் திறனை வெளிப்படுத்துவதில் சிறப்பானது என்ற நற்பெயரை பெற்றிருக்கிறது. அதனை தக்க வைக்கும் விதத்தில், புதிய ஏர் இன்டேக்குகளுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 698சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் சீரான பவர் டெலிவிரியையும், சிறப்பான டார்க் திறனையும் வழங்க வல்லது.

2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 282மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 245மிமீ டிஸ்க் பிரேக்கும் இருப்பதுடன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட உள்ளது.

2018 யமஹா எம்டி-07 பைக் அறிமுகம்!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனுடன் மேம்படுத்தப்பட்ட புதிய எம்டி-09 மற்றும் எம்டி10 ஆகிய பைக் மாடல்களையும் யமஹா அறிமுகம் செய்துள்ளது.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியின் செய்திகள்!

மேலும்... #யமஹா #yamaha #2017 eicma
English summary
2018 Yamaha MT-07 revealed at EICMA 2017.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark