இந்தியாவில் ரூ.20.73 லட்சம் விலையில் களமிறங்கிய யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர் 1 சூப்பர்பைக்..!!
இந்தியாவில் ரூ.20.73 லட்சம் விலையில் களமிறங்கிய யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர் 1 சூப்பர்பைக்..!!
யமஹா மோட்டார் இந்தியாவின் புதிய ஒய்.இசட்.எஃப்-ஆர்1 சூப்பர்பைக் ரூ.20.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் சூப்பர்பைக்குகளுக்கான சந்தையில் தனக்கு இருக்கும் மதிப்பை தக்கவைத்துக்கொள்ள யமஹா அறிமுகம் செய்துள்ள மாடல் தான் ஒய்.இசட்.எஃப்-ஆர்1 பைக்.

ஃபிளாக்ஷிஃப் மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ள ஒய்.இசட்.எஃப்-ஆர் 1 பைக், யமஹா ப்ளூ மற்றும் டெக் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

சிபியூ (Completely Built Unit) முறையில் புதிய ஒய்.இசட்.எஃப்-ஆர்1 சூப்பர் பைக்கை யமஹா தயாரித்துள்ளது.
யமஹா முன்னர் வெளியிட்டஒய்.இசட்.ஆர்- எம்1 பைக்கை பின்பற்றி இதையும், கிராஸ் பிளான் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது.

புதிய அலுமினியம் ஃபிரேம் மற்றும் வலிமையான கேஸிஸ் அமைப்பை பெற்றுள்ள இந்த பைக், 998சிசி திறன் பெற்ற லிக்விடு கூல்டு 4 சிலிண்டர் எஞ்சினை பெற்றுள்ளது.
Recommended Video


6-ஸ்பீடு ஸ்லிப்பர் கிளட்ச் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ள இதன் எஞ்சின் அதிகப்பட்சமாக 197.2 பிஎச்பி பவர் மற்றும் 112.4 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆர்1 மாடலை விட இந்த புதிய மாடலில் க்விக்ஷிஃப்ட் சிஸ்டம் மற்றும் லிஃப்ட் கன்ட்ரோல் அமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

யமஹாவின் புதிய ஒய்.இசட்.எஃப்-ஆர்1 பைக் 690மிமீ அகலம், 2055மிமீ நீளம், 1150மிமீ உயரம் கொண்டது. மேலும் இதனுடைய வீல் பேஸ் 1405மிமீ.

சுமார் 200கிலோ எடைக்கொண்ட இந்த பைக்கின் முன்பக்க டயர் 320மிமீ டூயல் டிஸ்க் பிரேக் அமைப்பை பெற்றுள்ளது.
அதேபோல இதனுடைய ரியர் வீல் சிங்கிள் டிஸ்க் பிரேக் அமைப்பு மற்றும் ஏபிஎஸ் வசதி கொண்டுள்ளது.

ஒரு ரேஸ் பைக்கிற்கான தரத்துடன் தயாராகியுள்ள யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்1 பைக்கின் இரண்டு பக்கவாட்டிலும், காற்றை உள்ளிழுக்கும் இடங்களில் எல்.இ.டி ஹெட்லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஒய்.இசட்.ஆர்-எம்1 பைக்கில் இருப்பது போன்ற ட்வின் எல்.இ.டி ரன்னிங் லைட்ஸ் புதிய ஒய்.இசட்.எஃப்-ஆர்1 பைக்கிலும் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

பேங்கிங் சென்சிட்டிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்லைடு கண்ட்ரோல், குவிக்ஷிஃப்டர், ஆண்டி-வைடு வீல் கன்ட்ரோல், யுனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம், லிஃப்ட் கன்ட்ரோல் சிஸ்டம்,

சிப் கண்ட்ரோல்டு திராட்டில் மற்றும் பவர் டெலிவரி மோடு ஆகியவை யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்1 சூப்பர் பைக்கின் பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

பெரும்பாலும் ஒய்.இசட்.ஆர்-எம்1 பைக்கை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ள ஒய்.இசட்.எஃப்-ஆர்1 பைக், யமஹா ரேஸிங் குழுவிற்கான சிறந்த தயாரிப்பாக காட்சியளிக்கிறது.

கூடுதலாக இந்த பைக்கின் எஞ்சினில் இடம்பெற்றுள்ள புதிய தொழில்நுட்ப மேம்பாட்டால், ஒய்.இசட்.எஃப்-ஆர்1 பைக் சிறப்பான செயல்திறனை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள லிட்டர்-கிளாஸ் மோட்டார் சைக்கிள்களில் சில குறிப்பிட்ட மாடல்களில் யமஹாவின் ஒய்.இசட்.எஃப்-ஆர்1 பைக்கி நிச்சயம் உலகளவில் கவனமீர்க்கும்.


Click it and Unblock the Notifications








