ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்!

Written By:

சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான வரவேற்பு இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பல புதிய எலக்ட்ரிக் வாகன மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒகினவா ஆட்டோடெக் என்ற நிறுவனம் புதிய ஸ்கூட்டர் மாடலை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஒகினவா ரிட்ஜ் என்ற பெயரில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அழைக்கப்படுகிறது. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற சிறப்பம்சங்களை இந்த ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 200 கிமீ தூரம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு 55 கிமீ வேகம் வரை எட்டவல்லது.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சாதாரணமாக இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். குயிக் சார்ஜ் முறையில் சார்ஜ் ஏற்றும்போது ஒரு மணிநேரத்தில் சார்ஜ் செய்துவிட முடியும்.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஸ்கூட்டரில் ஸ்பீடோமீட்டர், சென்ட்ரல் லாக்கிங் ஸ்மார்ட் கன்ட்ரோலர், ஆன்ட்டி தெஃப்ட் அலாரம் போன்ற வசதிகள் உள்ளன.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஈக்கோ மற்றும் பவர் என்ற இருவிதமான டிரைவிங் மோடுகளும் உண்டு. இதன்மூலமாக, விருப்பத்திற்கு ஏற்ப மின் மோட்டார் இயக்கத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஸ்கூட்டர் 50 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டது. இருக்கைக்கு கீழே பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதியும் உண்டு. தற்போது மார்க்கெட்டில் இருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகவும் கவர்ச்சிகரமான மாடலாகவும் இருக்கிறது.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை மிக முக்கியமானதாக இருக்கின்றது.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சிவப்பு, வெள்ளை நிறங்களிலும், சிவப்பு- வெள்ளை மற்றும் பச்சை - தங்க நிற கலவைகளிலும் கிடைக்கிறது.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ராஜஸ்தான் மாநிலம், பிவாடியில் உள்ள ஒகினவா நிறுவனத்தின் ஆலையில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.43,702 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டுகாட்டி 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக்கின் படங்கள்!

டுகாட்டி 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Okinaawa Autotech has launched its new electric scooter, the Ridge in the Indian market. The e-scooter is priced at Rs 43,702 ex-showroom (Delhi).
Story first published: Tuesday, January 24, 2017, 9:26 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos