முதல் முறையாக பஜாஜ் பல்சர் பைக்குகளை விற்பனையில் முந்தியது புல்லட்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதல் முறையாக பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குகளை விட அதிகளவிலான பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் 'ராயல் என்ஃபீல்டு’. இது 1893ஆம் ஆண்டு முதலே மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் வலம் வருவதை பலரும் பெருமைமிகு அடையாளமாக கருதுகின்றனர்.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

கடந்த ஜனவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மாடல் பைக்குகளை விட கூடுதலாக 3,000 எண்ணிக்கையிலான கிளாசிக்350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் சில ஆண்டுகளாகவே இருசக்கர விற்பனையில் முன்னணியில் இருந்த பல்சர் முதல் முறையாக சறுக்கலை சந்தித்துள்ளது.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 36,456 பல்சர்களை விற்றுள்ள நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனமோ 39,391 எண்ணிக்கையிலான கிளாசிக்350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக்350, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் பைக்குகளின் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள்ளாக வந்துள்ளது. இதுவும் முதல் முறை சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 27,362 கிளாசிக்350 மாடல் பைக்குகளை விற்பனை செய்திருந்த நிலையில், இந்தாண்டு அதன் விற்பனை 39,391 ஆக உள்ளது. இது 43.96% வளர்ச்சி ஆகும்.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

இதே நேரத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் (2016) பல்சர் விற்பனையை கணக்கில் கொண்டால் 46,314 என்றிருந்த நிலையிலிருந்து தற்போது (2017 ஜனவரி) 36,456 என்ற பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

125 சிசி, 150 சிசி பைக்குகளின் செக்மெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இடம்பெறவில்லை, அது 350சிசி க்கு மேலான செக்மெட்டில் தான் இடம்பெற்றுள்ளது, எனினும் விலை, டிசைன் மற்றும் சொகுசு என வாடிக்கையாளர்களின் எதிர்பார்பை அவை திருப்திப்படுத்துவதால் அந்நிறுவனத்திற்கு தொடர்ந்து ஏறுமுகம் தான் என்பது தெரிகிறது.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

ஜனவரி 2017ல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய பைக்குகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் ஸ்பெளண்டர், ஹச்எஃப் டீலக்ஸ், சிபி ஷைன், பேஷன், கிளாசிக் 350 ஆகிய மாடல்கள் உள்ளன.

பஜாஜ் பல்சர் பைக்கை விற்பனையில் முந்திய புல்லட்!

டாப்10 வரிசையின் அடுத்த இடங்களை ஹீரோ கிளாமர், பஜாஜ் பல்சர், பஜாஜ் பிளாட்டினா, ஹோண்டா ட்ரீம் மற்றும் ஹோண்டா யுனிகார்ன் ஆகிய மாடல்கள் பிடித்துள்ளன.

டிரையம்ப் போனேவில்லே பாபர் மாடல் பைக்கின் படங்கள்:

Most Read Articles
English summary
Royal Enfield sold 39,391 units of Classic 350 in January against 27,362 units in January 2016 to register a growth of 43.96 percent.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X