ராயல் என்ஃபீல்டு இந்தியாவின் 4வது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமானது

Written By:

அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், விற்பனையில் அதன் போட்டியாளரான டிவிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்திய இருசக்கர வாகன சந்தையில் 4வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. முன்னதாக அந்த இடத்தில் டிவிஎஸ் நிறுவனமே இருந்தது.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

நவம்பர் 2016 முதல் ஜனவரி 2017 வரையிலான 3 மாத காலகட்டத்தில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 1,70,292 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. இதே காலகட்டத்தில் டிவிஎஸ் நிறுவனமோ 1,18,489 வாகனங்கள் மட்டுமே விற்றுள்ளது.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

பட்ஜெட் விலையிலான மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த திடீர் சரிவுக்கு, கடந்த நவம்பரில் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டும் அல்லாமல் வாகன தயாரிப்பில் புகுத்தப்பட்ட பிஎஸ்4 எனப்படும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

பட்ஜெட் ரக மோட்டார் சைக்கிள்களுக்கு அப்பார்ப்பட்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 3 மாத காலகட்டத்தில் முறையே 55,843, 56,316 மற்றும் 58,133 என 1,70,292 எண்ணிக்கையிலான வாகனங்களை விற்றுள்ளது. ஆனால், டிவிஎஸ் நிறுவனம் 45359, 37136 மற்றும் 35994 என மொத்தம் 1,18,489 வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய காலகட்டத்தில் டிவிஎஸ் நிறுவனத்தை பொருத்த வரையில், அக்டோபர் 2016ல் 96,673 வாகங்களை விற்ற நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதே மாதத்தில் 58,379 வாகனங்களை மட்டுமே விற்றிருந்தது. இதுவே அந்நிறுவனத்தின் சரிவுக்கு உதாரணமாக அமைகிறது.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

இது குறித்து கருத்து தெரிவித்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுசிக் மாதவன், ‘ஹிமாலயன்' மாடல் பைக்குக்கு அமோக வரவேற்பு கிடைத்துவருவதாகவும், தங்களது நிறுவனம் மேலும் உயர இந்த ஆண்டில் புதிய மாடல் ஒன்றினை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

டிவிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய ராயல் என்ஃபீல்டு

ஒட்டுமொத்தத்தில் 11,30,928 வாகங்களை விற்றுள்ள ஹீரோ கார்ப் முதலிடத்திலும், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் 2வது மற்றும் 3வது இடங்களிலும் உள்ளது.

பஜாஜ் டாமினார்400 பைக்கின் படங்கள்:\

English summary
Royal Enfield has snatched the crown of 4th largest motorcycle manufacturer in India from TVS Motor Company riding on healthy sales.
Please Wait while comments are loading...

Latest Photos