ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் கஸ்டமைஸ் மாடல் வெளியீடு

Written By:

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உருவாக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விரைவில் மேட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவு இந்த கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிளை உருவாக்கி உள்ளது. பிரபல டிசைனர் ஜீசஸ் டி ஜூவான் என்பவர்தான் இந்த கஸ்டமைஸ் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

இந்த மோட்டார்சைக்கிளானது கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த கண்காட்சி ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மோ பொவா மற்றும் டர்ட்டி டக் கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் உதிரிபாகங்கள் மற்றும் கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளின் ஃப்ரேம் பயன்படுத்தி கஸ்டமைஸ் செய்துள்ளனர். ராயல் என்ஃபீல்டு க்ரீன் ஃப்ளை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவின் வர்த்தக இயக்குனர் ஜோகின் குனட் கொடுத்த இந்த கஸ்டமைஸ் பணியை மிக சவாலாக எடுத்துக் கொண்டு செய்ததாக ஜீசஸ் டி ஜுவான் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

இந்த கஸ்டமைஸ் பணிக்கு ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் ஃப்ரேம் மிகவும் சிறப்பாக இருந்ததால் தேர்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆஃப்ரோடு மாடலுக்கு உண்டான தகவமைப்புகளுடன் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்குவதற்கும் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மற்றும் கான்டினென்டல் ஜிடி ஆகிய மோட்டார்சைக்கிள்களின் கலவையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய கஸ்டமைஸ் மாடலில் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் தலைகீழ் ஃபோர்க் அமைப்புடைய சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

இந்த மோட்டார்சைக்கிளில் பிரத்யேக கிளி பச்சை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. முக்கிய பாகங்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை அமைப்புடன், மிக வித்தியாசமான தோற்றத்தை பெற்றிருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

முன்புறத்தில் 140மிமீ அகலமுடைய பால் டயர்களும், பின்புறத்தில் 150மிமீ அகலமுடைய டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பார்ப்பதற்கு டயர்கள் மிகவும் பெருத்த தோற்றத்தை தருவதாக அமைந்துள்ளது.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

முன்புறம், பின்புற சக்கரங்களில் பெட்டல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, இரண்டு புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஒரு பிளாஸ்டிக் பட்டையில் இடது புறமாக தள்ளி பொருத்தப்பட்டு இருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

மாசு உமிழ்வு அம்சத்திற்கு ஏற்ப கேட்டலிக் கன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட சைலென்சர் உள்ளது. எனவே, சாதாரண சாலைகளிலும் இயக்குவதற்கான அனுமதியை பெறும் வாய்ப்புள்ளது.

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சி தர வரும் ராயல் என்ஃபீல்டு!!

அடுத்த மாதம் மேட்ரிட் நகரில் நடைபெற இருக்கும் ஆட்டோ ஷோவில் இந்த ராயல் என்ஃபீல்டு ஃப்ளை மோட்டார்சைக்கிள் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் படங்கள்!

புதிய கேடிஎம் ஆர்சி 390 ஸ்போர்ட்ஸ் பைக்கின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
The Royal Enfield Classic 500 Green Fly is based on the Classic 500 and the frame of the Continental GT; to be showcased at the Madrid Auto Show in March 2017.
Story first published: Friday, February 10, 2017, 14:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark