எக்ஸ்க்ளூசிவ்: ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

Written By:

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சக்திவாய்ந்த புதிய 650சிசி எஞ்சின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் உங்களுக்கு உடனடியாக வழங்கியது. இந்த நிலையில், அடுத்து ஒரு பிரத்யேக தகவலையும் இந்த செய்தியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

ஆம். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் விபரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் ராயல் என்எஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 என்ற பெயரில் வர இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

ஏற்கனவே, விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளின் சக்திவாய்ந்த மாடலாக இந்த புதிய மாடல் வெளிவர இருக்கிறது. மேலும், இந்த மோட்டார்சைக்கிள் இன்று இத்தாலியிலுள்ள மிலன் நகரில் துவங்க இருக்கும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

அதற்கு முன்பாகவே, இந்த புதிய 650சிசி எஞ்சின் எந்த மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட உள்ளது என்று ஆவலோடு காத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்காக இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறோம்.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 மோட்டார்சைக்கிளில் 648சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின்களையே ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது முதலாவது இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் வர இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் தவிர்த்து, இன்டர்செப்ட்டார் என்ற புதிய மோட்டார்சைக்கிளிலும் இந்த புதிய 648சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளிலும் இன்று மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

இரு மோட்டார்சைக்கிளிலும் இடம்பெற இருக்கும் புதிய 650சிசி எஞ்சின் அதிகபட்சமாக 46.3 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் காற்று மற்றும் ஆயில் மூலமாக எஞ்சின் குளிர்விப்பு தொழில்நுட்பம் கொண்டதாக வருகிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் வெளிநாடுகளில் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், வாடிக்கையாளர் எதிர்பார்த்த அளவு செயல்திறனை பெற்றிருக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

மேலும், அங்குள்ள அதிவிரைவு சாலைகளில் செல்லும்போது, அதிகபட்சமாக 112.6 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது. இது போதாது என்று பல வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சக்திவாய்ந்த புதிய எஞ்சினுடன் கான்டினென்டல் ஜிடி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் பெயர் விபரம்!

ஐரோப்பாவில் கஃபே ரேஸர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. எனவே, அங்குள்ள வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

Spy Image Credit: Rushlane

English summary
Royal Enfield is all set to reveal two new motorcycles at EICMA 2017 on November 7. The two new motorcycles will be powered by a brand new 648cc parallel-twin engine.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark