புதிய ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

Written By:

மிலன் மோட்டார்சைக்கிளில் நடந்த நிகழ்ச்சியில், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 ஆகிய மாடல்கள் சற்றுமுன் பொது பார்வைக்கு வந்தன. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களுமே பழமையையும், மோட்டார்சைக்கிள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மாடல்களாக வந்துள்ளன.

2 புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

உலகின் பாரம்பரியம் மிக்க மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு இதுவரை சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், முதல்முறையாக இரண்டு சிலிண்டர்கள் கொண்ட புதிய 650 எஞ்சினுடன் இரண்டு மோட்டார்சைக்கிள்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.

2 புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள 535சிசி எஞ்சின் கொண்ட கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளின் சக்திவாய்ந்த மாடலாக புதிய கான்டினென்ட்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. வடிவமைப்பில் சிறிய மாறுதல்களையும், இரட்டை சைலென்சர் அமைப்புடன் வந்துள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Triumph Street Scrambler Launched In India - DriveSpark
2 புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

இதில், கான்டினென்ட்டல் ஜிடி 650 வடிவமைப்பில் 535சிசி மாடலை ஒத்திருந்தாலும், இதில் இருக்கும் ப்ரேம் அமைப்பு முற்றிலும் புதிது. இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

2 புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிள்களில் அதிகபட்சமாக 47 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும் பேரலல் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் ஆரம்ப நிலையில் மிகச் சிறப்பான டார்க் திறனை அளிக்க வல்லதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2 புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

முதலில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அடுத்து இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த புதிய மாடல்களை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

2 புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

உருவத்தில் ஒத்திருந்தாலும், இந்த புதிய கான்டினென்ட்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் 95 சதவீதம் முற்றிலும் புதிய மாடலாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!

இதனிடையே, இந்த புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகத்தின்போது சில கூடுதல் தகவல்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் லால் கூறினார். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 116 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டிருந்தாலும், கடந்த தசாப்தத்தில் விற்பனையில் 16 மடங்கு வளர்ச்சி கண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்த புதிய மோட்டார்சைக்கிள்களுடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய அத்யாயத்தில் அடியெடுத்து வைக்க இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

English summary
Royal Enfield Continental GT 650 Revealed At EICMA.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark