ஆஸ்திரேலியாவில் புதிய சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

Written By:

சென்னையை சேர்ந்த பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, புல்லட் பைக்குகளுக்கு பெயர் போனது. இது இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பிரபலமாக விளங்கி வரும் ஒரு பிராண்டாகும். இதில் தண்டர்பேர்டு, ஹிமாலயன், கிளாஸிக், புல்லட், போன்ற மாடல்களும் உள்ளது. எனினும் ராயல் என்ஃபீல்டு மாடல்களிலேயே மிகவும் அதிகபட்ச வேகத்தை காண்டினெண்டல் ஜிடி மாடல் எட்டி சாதனை படைத்துள்ளது.

அதிவேக சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

ஆஸ்திரேலியாவில் "டிரை லேக் ரேசர்ஸ் ஆஸ்திரேலியா ஸ்பீடு வீக்" என்ற பெயரில் சர்வதேச பைக் பந்தயம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் பல ரேசர்கள் கலந்துகொண்டனர். வருடா வருடம் நடைபெறும் இப்போட்டியானது, அங்கு கோடை காலத்தில் வறண்டுவிடும் ஒரு உப்பு ஏரி-யில் நடத்தப்படுகிறது.

அதிவேக சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

முற்றிலும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கு இந்த ஏரியில் நடத்தப்பட்ட போட்டியின், ‘650 எம்பிஎஸ்-பிஜி' எனும் பிரிவில் ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி பைக் உரிமையாளர் ஒருவரும் கலந்துகொண்டார். இது பியூல் பம்ப் சிஸ்டம் கொண்ட 650 சிசி புஷ் ராட் இஞ்சின் பைக்குகளுக்கான ஓப்பன் பந்தய பிரிவாகும்.

அதிவேக சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

இந்த பந்தயத்தில் காண்டினெண்டல் ஜிடி பைக்கில் பங்கேற்ற பிரான்க் சாம்சன் என்பவர் அதிகபட்சமாக மணிக்கு 166.311 கிமீ வேகத்தில் சென்று பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது காண்டினெண்டல் பைக்கின் அதிகபட்ச வேக சாதனையாகும்.

அதிவேக சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

பந்தயத்தில் வென்ற காண்டினெண்டல் ஜிடி பைக் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய புஷ் ராட்கள், வால்வுகள் மற்றும் வால்வு ஸ்பிரிங்குகள் போன்றவை மாற்றப்பட்டன.

அதிவேக சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

டைனமிக் பவர் கமாண்டர் வி எனும் சாதனம் மூலம் இஞ்சினின் ஆற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் டைனோ டுயூனிங்கும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பைக்கின் செயல்திறன் 40 % அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 40 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் அளவுக்கு டியூன் செய்யப்பட்டது.

அதிவேக சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி பைக், ஒற்றை சிலிண்டர் கொண்ட, 535 சிசி ஏர் கூல்டு இஞ்சின் கொண்டதாகும். இது அதிகபட்சமாக 29.10 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இது எலெக்ட்ரானிக் பியூல் இஞ்செக்டட் சிஸ்டம் கொண்ட பைக் ஆகும்.

அதிவேக சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு பைக்

கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் கிடைக்கும் காண்டினெண்டல் ஜிடி பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை ரூ. 2,23,493 ஆகும்.

டிரையம்ப் போனவில்லே பாபர் பைக்கின் படங்கள்: 

English summary
The Royal Enfield Continental GT was in the ‘650 MPS-PG’ category, which is open for bikes with up to 650cc pushrod engines using fuel pump system, attaining a maximum speed of 166.311 km/h.
Story first published: Tuesday, March 14, 2017, 11:13 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos