தாய்லாந்தில் தரிசனம் தந்த மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மின்சார மோட்டார்சைக்கிள் தாய்லாந்து நாட்டில் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மின்சார வாகன தயாரிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளை அரசு துவங்கி இருக்கிறது. இதனையடுத்து, அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார வாகன தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கி இருக்கின்றன.

மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

அந்த வகையில், நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எதிர்காலத்தில் மின்சார மோட்டார்சைக்கிள்களை உருவாக்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்திருந்தார்.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

இந்த சூழலில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் மின்சார மாடல் தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் உள்ள ஷோரூமில் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.

மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் பகுதியில் பேட்டரி பொருத்துவதற்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. செயின் டிரைவிற்கு பதிலாக பெல்ட் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புகைப்போக்கி குழல் இல்லை.

மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

மேலும், மின்சார மோட்டார்சைக்கிளில் முழுவதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

அதேநேரத்தில், இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட மாடலா அல்லது தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அந்த டீலர் உருவாக்கிய மாடலா என்பது தெரியவில்லை.

மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

வடிவமைப்பு மிக நேர்த்தியாக இருப்பதால், இது நிறுவனத்தின் நேரடி அனுமதியின் பேரில் உருவாக்கப்பட்டிருக்கலாம். எனினும், அடுத்த சில ஆண்டுகளில் மின்சார புல்லட் மோட்டார்சைக்கிளை நிச்சயம் ராயல் என்ஃபீல்டு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Royal Enfield Electric Motorcycle showcased In Thailand.
Story first published: Saturday, December 16, 2017, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X