இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் ரூ.1.6 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

இந்தாண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிக எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1,60,500 விலை மதிப்புள்ள ஹிமாலயன் மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு தற்போது டெல்லி உட்பட சில முக்கிய நகரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

பொதுவாகவே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை முன்பதிவு செய்தால் அவை வாடிக்கையாளர்களுக்கு வந்து சேர கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் வரை ஆகும். அதுபோன்ற நிலை இனி இருக்ககூடாது என்பதை குறிக்கோளகக்கொண்டு ராயல் என்ஃபீல்டு இந்திய சந்தையில் செயல்படவுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டெல்லியை பொருத்தவரை ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் விலை 1.78 லட்சம் ரூபாயில் விற்கப்படுகிறது. தற்போதைய நாட்களில் முன்பதிவு செய்தால் மே மாதம் 2வது வாரத்தில் வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்படும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்திய சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹிமாலயன் மோட்டார் சைக்கிள், ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இருவேறு சாலைகளிலும் ஓட்டக்கூடிய தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி, ஓட்டுநரின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் விதத்தில் பைக்கின் தயாரிப்புகள் உள்ளன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

411சிசி திறன் கொண்ட சிங்கிள்-சிலிண்டர் லாங் ஸ்ட்ரோக் எஞ்சின் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 24.5 பி.எச்.பி பவர் மற்றும் 32 என்.எம் டார்க் ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும் இரண்டு மாதங்கள் கழித்து ஆண்டி பிரேக் சிஸ்டம் கொண்ட ஹிமாலயன் மாடல்களை ராயல் என்ஃபீல்டு தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மார்ச் மாதத்தில் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்போது ரூ. 1.55 லட்சமாக இருந்த இதன் விலை, பி.எஸ்.3 எஞ்சினுக்கு உச்சநீதி மன்றம் விதித்த தடை காரணமாக, அனைத்து பைக்குகளிலும் பி.எஸ். 4 எஞ்சின் பொருத்தப்பட்டு, ரூ.1.6 லட்சமாக ஹிமாலயன் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளுக்கான அத்தனை அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. இயந்திரவியல் செயல்பாடுகளை பொருத்தளவில் எந்த மாற்றத்தையும் கொண்டுயில்லாமல், வடிவமைப்பில் மட்டும் சில மாற்றங்களை ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன்: இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் விற்பனை பட்டியல்.

நகரம் விலைப்பட்டியல்
நியூ டெல்லி ரூ.1,60,000
மும்பை ரூ. 1,70,000
கொல்கத்தா ரூ. 1,65,771
சென்னை ரூ. 1,63,156
ஹைதராபாத் ரூ. 1,62,572
Hyderabad Rs 1,62,572
திருவனந்தபுரம் ரூ. 1,61,341
English summary
Royal Enfield Himalayan launched in India. The BS IV compliant Himalayan sports a fuel injected engine.
Story first published: Saturday, April 8, 2017, 11:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark