ரூ.5,500 விலையில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எஃப்.ஐ பிஎஸ் 4 பைக்கிற்கு முன்பதிவு தொடக்கம்..!!

Written By:

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் எஃப்.ஐ பைக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் பலருக்கும் ஒரு நற்செய்தி இணையம் வழியாக பரவி வருகிறது.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

மத்திய அரசின் உத்தரவை ஏற்று ஹிமாலயன் எஃப்.ஐ மாடல் பைக்கில் பிஎஸ்4 எஞ்சின் பொருத்தும் பணி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தீவரமாக மேற்கொண்டது.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

ஆஃப்-ரோடு மற்றும் ஆன் -ரோடு என இருவேறு தேவைகளுக்கும் பயன்படும் வகையில் தயாராகியுள்ள இந்த பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

இந்தியாவில் விரைவில் வெளிவரும் இந்த பைக்கின் டெஸ்ட் டிரைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்க காத்திருக்கும் ஹிமாலயன் எஃப்.ஐ பைக்கிறான சோதனை ஓட்டம் தற்போது கேரளாவில் நடக்கிறது.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

இந்த பைக்கை வெளிடுவது தொடர்பாக பேசிய ராயல் என்ஃபீல்டு நிறுவன அதிகாரிகள், மும்பை மற்றும் டெல்லியில் பிஎஸ்.4 ஹிமாலயன் எஃப்.ஐ-க்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

முன்பதிவிற்கான விலை ரூ.5,500 முதல் தொடங்குவதாக குறிப்பிட்ட அவர்கள், முன்பதிவு செய்தவர்களுகு மட்டும் அக்டோபர் 2017 முதல் பிஎஸ்.4 ஹிமாலயன் எஃப்.ஐ பைக் விநியோகம் செய்யப்படும் என்று கூறினர்.

Recommended Video
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ராயல் என்ஃபீல்டு பிஎஸ்4 எஃப்.ஐ பைக்கிற்கு ரூ.1,65,331 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மும்பை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் இந்த பைக்கிற்கு ரூ.1,70,190 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

முன்பதிவில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பைக் விநியோகம் செய்வது தொடர்பாக உரிமையாளர்களுக்கு தகவல் உடனே தெரிவிக்கப்படும்.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

மேலும் தாமதமாக்கக்கூடிய காலவரை வெறும் 2 மாதங்களுக்குள் மட்டுமே இருக்கும் எனவும் ராயல் என்ஃபீல்டு நிறுவன அதிகாரிகள் சொல்கின்றனர்.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

ஸ்பை படங்கள் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, ஹிமாலயன் எஃப்.ஐ பைக்கில் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

மேட் பிளாக் நிறத்தில் காணப்படும் இந்த பைக்கில் 411சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 24.5 பிஎச்பி பவர் மற்றும் 32 என்.எம் டார்க் திறன் உள்ளது.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

220 மீட்டர் கிரெவுன்ட் கிளியரென்ஸ் பெற்றுள்ள இந்த பைக்கின் முன்பக்க சக்கரங்கள் 21 அங்குலத்திலும், பின்பக்க சக்கரங்கள் 17 அங்குலத்திலும் உள்ளன.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

ஹிமாலயன் எஃப்.ஐ பிஎஸ்4 பைக்கிற்கு மும்பையில் மூன்று ஆண்டுகள் காப்பீடு சேர்த்து ஆன்ரோடு விலை ரூ.2,00,649 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்கும் பிஎஸ் 4 கொண்ட ஹிமாலயன் எஃப்.ஐ பைக்..!!

அதேபோல, டெல்லி நகரத்தில் ஒரு வருட காப்பீட்டு தொகையை சேர்த்து ஆன்ரோடு விலை ரூ.1,84,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: Royal Enfield Himalayan FI BS4 Booking Starts in Mumbai and Delhi. Click for Details...
Story first published: Saturday, August 12, 2017, 13:43 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos