புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

Posted By:

இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், நடந்த நிகழ்ச்சியில் புதிய இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சற்றுமுன் அறிமுகம் செய்தது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

அதில், கான்டினென்ட்டல் ஜிடி மாடலின் டிசைன் எல்லோருக்கும் பரீட்சயமானதுதான் என்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாடல் இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள்தான். இந்த மோட்டார்சைக்கிள் குறித்த தகவல்களையும், படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய ராயல் என்ஃபீல்டு மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பில் பழமையையும், தொழில்நுட்பத்தில் நவீனத்தையும் கலந்து கட்டிய கலவையாக இதனை கூற முடியும்.

புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

1960 முதல் 1970 வரை இங்கிலாந்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உற்பத்தி செய்த இன்டர்செப்ட்டார் மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், வடிவமைப்பில் தற்போது பல மாற்றங்களுடன் நவீன யுக மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

Recommended Video
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிள்களில் அதிகபட்சமாக 47 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும் பேரலல் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் ஆரம்ப நிலையில் மிகச் சிறப்பான டார்க் திறனை அளிக்க வல்லதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

வாகனங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தக்கவாறு மாறுதல் செய்யப்பட்டு செல்லும். ஆனால், இன்டர்செப்ட்டார் 650 மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களும் உலக அளவில் ஒரே சிறப்பம்சங்கள் கொண்டதாக விற்பனைக்கு செல்ல இருக்கின்றன.

புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

எனவே, இந்த மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும்போது பல்வேறு சவால்களை சந்தித்தாக வடிவமைப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து நாட்டு வாடிக்கையாளர்களின் ரசனை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக உருவாக்கி இருப்பதாகவும் கூறினர்.

புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

இது மிகவும் பிரத்யேக மோட்டார்சைக்கிள் மாடல்களாக இருப்பதால், முதலில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அடுத்து இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த புதிய மாடல்களை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

English summary
Royal Enfield has revealed the all-new Interceptor 650 at the EICMA 2017 motorcycle show in Milan, Italy.
Please Wait while comments are loading...

Latest Photos