பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

Written By:

பாரத் ஸ்டேஜ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வட்டாரத்திலிருந்து இந்த தகவல் டிரைவ்ஸ்பார்க் தளத்திடம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பிஎஸ்-3 மாசுக் கட்டுப்பாட்டு தரம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இதனால், தலைநகர் டெல்லி உள்பட என்சிஆர் பிராந்தியத்தில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், அங்கு பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே வட்டாரர போக்குவரத்து அலுவலங்களில் பதிவு செய்ய முடியும்.

பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்-4 மாசு தரக்கட்டுப்பாட்டு அம்சம் பொருந்திய எஞ்சினுடன் இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதனால், அனைத்து இருசக்கர வாகனங்களும், பிஎஸ்-4 மாசு விதிகளுக்குப்பட்டு எஞ்சின்களை மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகின்றன.

பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளும் விரைவில் பிஎஸ்-4 மாசு தரம் பொருந்திய எஞ்சினுடன் வர இருக்கிறது. புதிய எல்எஸ்410 400சிசி எஞ்சினுடன் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் வர இருக்கிறது.

பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

இந்த புதிய எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய க்ளட்ச் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. இதனிடையே, கடந்த ஆண்டு இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் யூரோ-6 மாசு கட்டுப்பாட்டு தரம் பொருந்திய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

அந்த மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்காது என்று தெரிகிறது.

பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

அடுத்த மாதம் துவக்கத்தில் இந்த புதிய பிஎஸ்-4 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த மாத மத்தியில் டெலிவிரி துவங்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

பிஎஸ்-4 எஞ்சினுடன் ஏப்ரலில் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்களில் எஞ்சின் உள்பட பல தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பல புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், அந்த பிரச்னைகளை சரிசெய்து தற்போது மேம்படுத்தப்பட்ட மாடலாக வருகிறது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள். இனிமேல் பிரச்னைகள் எழாது என்ற நம்பிக்கையில் வாடிக்கையாளர்களும் இந்த புதிய மாடலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்!

குறைவான விலை பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய பைக்கின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: Royal Enfield To Launch Himalayan BS-4 Model in India Soon.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark