ஜிஎஸ்டி.,க்கு பின்னர் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் சென்னை ஆன்ரோடு விலை விபரம்!

Written By:

ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அனைத்து மோட்டார்சைக்கிள்களின் சென்னை ஆன்ரோடு விலை விபரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜிஎஸ்டி.,க்கு பின் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலை விபரம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்களின் விலை குறைந்துள்ளது. அதற்கு மேலான ரகத்தில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்யும் மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரித்துள்ளது.

சில மாடல்களின் விலை ரூ.2,211 வரை குறைந்துள்ளது. சில மாடல்களின் விலை ரூ.2,717 வரை அதிகரித்துள்ளது. மாடல் வாரியாக விலை மாற்ற விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

புல்லட் 350

புல்லட் 350

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் குறைவான விலை மோட்டார்சைக்கிள் மாடல் புல்லட் 350. இந்த மோட்டார்சைக்கிள் ரூ.1,27,925 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி காரணமாக இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ.1,661 குறைந்துள்ளது. இனி இந்த மாடல் ரூ.1,26,264 என்ற ஆன்ரோடு விலையில் கிடைக்கும்.

புல்லட் எலக்ட்ரா

புல்லட் எலக்ட்ரா

புல்லட் எலக்ட்ரா மோட்டார்சைக்கிள் ரூ.1,43,881 என்ற ஆன்ரோடு விலையில் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஜிஎஸ்டி.,க்கு பின்னர் இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ.2,211 வரை குறைந்து இனி ரூ.1,41,670 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படும்.

 கிளாசிக் 350

கிளாசிக் 350

பலரின் விருப்பமான தேர்வாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ரூ.1,52,897 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் இதன் விலை ரூ.2,015 வரை குறைந்துள்ளதால், இனி ரூ.1,50,882 என்ற ஆன்ரோடு விலையில் சென்னையில் விற்பனை செய்யப்படும்.

தண்டர்பேர்டு 350

தண்டர்பேர்டு 350

க்ரூஸர் மோட்டார்சைக்கிள் விரும்பிகளின் சிறந்த தேர்வாக இருந்து வரும் தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிள் ரூ.1,64,596 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஜிஎஸ்டி.,க்கு பின்னர் இந்த மோட்டார்சைக்கில் விலை ரூ.2,165 வரை குறைந்து இனி ரூ.1,62,431 என்ற ஆன்ரோடு விலையில் சென்னையில் விற்பனைக்கு கிடைக்கும்.

கிளாசிக் 500

கிளாசிக் 500

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள் ரூ.1,94,066 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மோட்டார்சைக்கிள் இனி ரூ.1,95,556 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

அதாவது, ஜிஎஸ்டி.,க்கு பின்னர் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ.1,490 வரை உயர்ந்துள்ளது.

கிளாசிக் டெசர்ட் ஸ்ட்ரோம்

கிளாசிக் டெசர்ட் ஸ்ட்ரோம்

இந்த மோட்டார்சைக்கிள் ரூ.1,97,173 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி இந்த மோட்டார்சைக்கிள் ரூ.1,98,808 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படும். இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ.1,635 வரை உயர்ந்துள்ளது.

கிளாசிக் க்ரோம்

கிளாசிக் க்ரோம்

கிளாசிக் க்ரோம் மோட்டார்சைக்கிள் ரூ.2,05,902 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மோட்டார்சைக்கிள் இனி ரூ.2,07,379 என்ற ஆன்ரோடு விலையில் சென்னையில் கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1,477 வரை உயர்ந்துள்ளது.

 தண்டர்பேர்டு 500

தண்டர்பேர்டு 500

தண்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிளின் விலை ரூ.2,07,719 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி இந்த மோட்டார்சைக்கிள் ரூ.2,09,078 என்ற ஆன்ரோடு விலையில் சென்னையில் கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1,359 உயர்ந்துள்ளது.

புல்லட் 500

புல்லட் 500

புல்லட் 500 மோட்டார்சைக்கிள் ரூ.1,83,513 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி இந்த மோட்டார்சைக்கிள் ரூ.1,84,682 என்ற ஆன்ரோடு விலையில் கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1,169 வரை உயர்ந்துள்ளது.

கான்டினென்டல் ஜிடி

கான்டினென்டல் ஜிடி

கஃபே ரேஸர் ரகத்தை சேர்ந்த இந்த மோட்டார்சைக்கிள் ரூ.2,31,336 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டது. இனி இந்த மோட்டார்சைக்கிள் ரூ.2,31,637 என்ற ஆன்ரோடு விலையில் கிடைக்கும். ரூ.301 வரை விலை உயர்ந்துள்ளது.

ஹிமாலயன்

ஹிமாலயன்

சாகச பிரியர்களுக்கு ஏற்ற தேர்வாக இருந்து வரும் இந்த மோட்டார்சைக்கிள் ரூ.1,81,437 என்ற ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி இந்த மோட்டார்சைக்கிள் ரூ.1,84,154 என்ற ஆன்ரோடு விலையில் கிடைக்கும். இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ.2,717 வரை உயர்ந்துள்ளது.

English summary
Royal Enfield product lineup includes both 350cc and 500cc bikes, and the Bullet, Thunderbird, and the Classic are available in both engine capacities. Below are the revised prices in Chennai.
Story first published: Wednesday, July 5, 2017, 12:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more