4 புதிய கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

Written By:

மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்ய விரும்புவோரின் மனதில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் முதலிடம் பிடித்து வருகின்றன. இதுவரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாங்கி வேறு கஸ்டமைஸ் நிறுவனங்களிடம் கொடுத்து கஸ்டமைஸ் செய்து வாங்கி வந்தனர் வாடிக்கையாளர்கள்.

 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனமே இப்போது கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை நேரடியாக கஸ்டமைஸ் செய்து தரும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. ஆம். இனி வெளி இடங்களில் கொடுத்து கஸ்டமைஸ் செய்து கொள்ளும் கட்டாயம் இல்லை.

 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனமே கஸ்டமைஸ் செய்து தரும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இதற்காக, 4 கஸ்டமைஸ் நிறுவனங்களுடன் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது.

 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

இன்லைன் த்ரீ, டிஎன்டி மோட்டார்சைக்கிள்ஸ், புல் சிட்டி கஸ்டம்ஸ் மற்றும் பாம்பே கஸ்டம் ஒர்க்ஸ் ஆகிய கஸ்டமைஸ் நிறுவனங்களுடன் ராயல் என்ஃபீல்டு இப்போது கைகோர்த்துள்ளது.

 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

இந்த கூட்டணியின் மூலமாக ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 மற்றும் கான்டினென்டல் ஜிடி ஆகிய மோட்டார்சைக்கிள்களை இந்த நிறுவனங்கள் கஸ்டமைஸ் செய்து தர இருக்கின்றன.

 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

4 புதிய கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களையும். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டு இருப்பதுடன், அதற்கான விசேஷ ஆக்சஸெரீகளையும், ஓட்டுனர்களுக்கான உடைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்களையும் வெளியிட்டு இருக்கிறது.

 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

இந்த மோட்டார்சைக்கிளுக்கான விசேஷ ஆக்சஸெரீகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் ராயல் என்ஃபீல்டு டீலர்கள் மட்டுமின்றி, ஃப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் இருந்தும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

 கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு!

இதுவரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாங்கி வெளியில் கஸ்டமைஸ் செய்து நிலை மாறி, இப்போது நிறுவனமே நேரடியாக கஸ்டமைஸ் மாடல்களை உருவாக்கித் தருவது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

English summary
Royal Enfield has collaborated with four custom builders: Inline Three, TNT Motorcycles, Bull City Customs and Bombay Custom Works to produce four custom motorcycles for motorcyclists.
Story first published: Thursday, June 22, 2017, 12:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark