சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டு வரும் போது கேமராவில் சிக்கிய புதிய யமஹா ஸ்கூட்டர்.. கூடுதல் தகவல்கள்!

Written By:

ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே ஃபேஸர்250 என்ற புதிய ரக பைக்கை டெஸ்ட் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து புதிய ஸ்கூட்டர் ஒன்றை இந்நிறுவனம் டெஸ்ட் செய்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னையில் தென்பட்ட யமஹாவின் புதிய மாடல் ஸ்கூட்டர்..!!

வெள்ளை நிற பெயிண்டிங் செய்யப்பட்ட யமஹா நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்கூட்டர் ஒன்று சென்னையில் டெஸ்ட் செய்து வருவது தெரியவந்துள்ளது.

சென்னையில் தென்பட்ட யமஹாவின் புதிய மாடல் ஸ்கூட்டர்..!!

இதன் மூலம் ஃபேஸினோ ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்த யமஹா நிறுவனம் ஆயத்தமாகி வருவது தெரியவந்துள்ளது.

சென்னையில் தென்பட்ட யமஹாவின் புதிய மாடல் ஸ்கூட்டர்..!!

இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மெண்ட் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதை கருத்தில் கொண்டே யமஹா நிறுவனம் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் தென்பட்ட யமஹாவின் புதிய மாடல் ஸ்கூட்டர்..!!

தற்போது சென்னையில் டெஸ்ட் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட யமஹாவின் புதிய ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இதன் கிடாஃப் ரெயில்கள் மற்றும் டெயில் லைட்டில் யமஹா லோகோ உள்ளது.

சென்னையில் தென்பட்ட யமஹாவின் புதிய மாடல் ஸ்கூட்டர்..!!

இந்த புதிய ஸ்கூட்டர் 110சிசி இஞ்சின் கொண்டதாக இருக்கலாம். ரியர் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. டிசைன் அடிப்படையில் இது ஃபேஸினோ ஸ்கூட்டரைப் போன்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தென்பட்ட யமஹாவின் புதிய மாடல் ஸ்கூட்டர்..!!

யமஹாவின் ரே மற்றும் ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் சிறந்த அளவில் விற்பனையாகி வருவதால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகாத சிக்னஸ் ஆல்ஃபா ஸ்கூட்டரின் இடத்தை புதிய ஸ்கூட்டர் நிரப்பும் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்த கூடுதல் தகவல்களை டிரைவ் ஸ்பார்க் தளத்தில் தொடர்ந்து காணுங்கள்...

English summary
Read in Tamil about spy pics of new yamaha scooter tested in chennai
Story first published: Friday, June 30, 2017, 13:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark