சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

Written By:

இளைஞர்களின் மனம் கவர்ந்த ஆரம்ப ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களில் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. விரைவில் இந்த பைக் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

இந்த புதிய ஏபிஎஸ் மாடலுக்கு இப்போது சுஸுகி டீலர்களில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. பெங்களூரில் உள்ள சுஸுகி டீலரில் இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு பெறப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.1,000 முன்பணத்துடன் இந்த மாடலுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடலில்தான் இந்த ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் ரக பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பெறும் முதல் மாடலாகவும் கூற முடியும்.

சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முன்சக்கரத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கை போன்ற ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அமைப்பு இந்த பைக்கில் இடம்பெற்று இருக்கிறது.

சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

இந்த பைக் மாடல் மூவர்ண கலவையிலான தேர்விலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், புதிய எஸ்பி சின்னத்துடனும் வருகிறது சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் ஏபிஎஸ் மாடல்.

Recommended Video - Watch Now!
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

இந்த பைக்கின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 154.9சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஏபிஎஸ் பைக் மாடலானது 2 கிலோ வரை கூடுதல் எடை கொண்டதாக இருக்கும். எனினும், மைலேஜில் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்று நம்பலாம்.

சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

இந்த பைக்கின் விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ரூ.1.2 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த பைக்கின் டெலிவிரியும் துவங்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.

சுஸுகி ஜிக்ஸெர் ஏபிஎஸ் மாடலுக்கு முன்பதிவு துவக்கம்!

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல் மட்டுமின்றி, சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் சாதாரண கார்புரேட்டர் எஞ்சின் மாடலிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

English summary
Suzuki dealerships in Bangalore revealed that the bookings are open for a token amount of Rs 1,000 for the ABS variant of the Gixxer SF. Suzuki is likely to launch the motorcycle within a week and deliveries will begin in around ten days.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark