”2018லும் புதிய மாடல் இல்லை” ஹயபுஸா பைக் ரசிகர்களுக்கு கையை விரித்த சுசுகி..!!

Written By:

எப்போதும் போல இந்த வருடமும் உலகின் அதிவேக செயல்திறனை பெற்ற சுசுகி ஹயபுஸா பைக்கில் மேம்படுத்தப்பட்ட மாடல் வெளிவரப்போவதில்லை.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிவேக திறன் பெற்ற பைக்குகளுக்கான வரிசையில் சுசுகியின் ஹயபுஸாவிற்கு தனித்துவமான இடம் உண்டு.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

இதனுடைய வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்காகவே உலகில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தையும் இந்த பைக் பெற்றுள்ளது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

பைக்குகளுக்கான அதிவேக சந்தையில் உலகின் டாப் மாடலாக உள்ள ஹயபுஸாவில் இதுவரை ஒரு மேம்படுத்தப்பட்ட மாடல் கூட வெளிவரவில்லை.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

இது ஹயபுஸாவை கனவு பைக்காக நினைத்து வாழும் பைக் ப்ரியர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 வருடங்கள் போல, இந்த வருடமும் சுசுகி நிறுவனம் ஹயபுஸாவில் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிடவில்லை.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

மேலும் கலிஃபோர்னியாவில் சூற்றுப்புற காற்று ஆய்வு ஆணையம் (CARB), ஹயபுஸாவால் ஏற்படும் மாசு உமிழ்வில் பெரிய பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளது.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

கடந்த ஆண்டிற்கான மாசு கட்டுபாட்டு அளவைத்தான் ஹயபுஸா மாடல் பைக்குகள் இந்த ஆண்டும் வெளிப்படுத்துவதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக இந்த ஆண்டும் எஞ்சின் அளவுகோளில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரே மாடலில் தான் ஹயபுஸா விற்பனை தொடரும் நிலையில் உள்ளது

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

கவாஸாகி நிறுவனம் ஹெச் 2 மற்றும் ஹெச் 2ஆர் என்ற உயரிய தளத்தில் தனது பைக்குகளை தயாரிக்க முடிவு செய்து, பணியை தொடங்கியது.

இந்த நிலையில் ஹயபுஸா பைக் மாடல்கள் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலாக உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

ஆனால் அதுபோன்ற எந்த ஒரு மாற்றமும் இந்த மாடல் பைக்கில் கவாஸாகி மேற்கொள்ளவில்லை. மேலும் ஃபோர்ஸிடு-இன்டக்சன் பவர் எஞ்சினுக்கு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

சுசுகி ஹயபுஸா பைக்கில் 1340சிசி திறன் பெற்ற லிக்குவிட்-கூல்டு இன்-லைன் 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 197 பிஎச்பி பவர் மற்றும் 155 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

மூன்று வித டிரைவிங் தேவைகள் மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

இந்தியாவிலும் ஹயபுஸா வாகனத்திற்கான தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். மின்சார இயக்கத்தில் தேவையான வசதிகளுடன் மற்றும் செயல்திறனில் மிரட்சி ஏற்படுத்தும் திறன் கொண்டதால் இந்த பைக் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

ஹயபுஸா பைக் மாடலில் ஆர்வம் காட்டாத சுசுகி..!!

இந்தியாவில் புஸா அசெம்பிள் செய்யப்பட்டதால், சுசுகி இதற்கான விலையை போட்டியுடன் தான் நிர்ணயம் செய்கிறது.

ஹயபுஸா மாடலுக்கு பிறகு சுசுகி ஜிஎஸ்எக்ஸ் 1300ஆர் மாடல் பைக்கும் சிறந்த செயல்திறன் மற்றும் தேவைகளுடன் கூடியதாக உள்ளது.

English summary
Read in Tamil: Suzuki Hayabusa has almost remained unchanged for ten years. Click for Details...
Story first published: Tuesday, August 8, 2017, 13:34 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark