இருசக்கர வாகன பிரிவில் தெறிக்கவிடும் விற்பனையை பெற்ற சுசுகி இந்தியா: புதிய சாதனையை நோக்கி..!!

Written By:

சுசுகியின் இருசக்கர வாகன தயாரிப்பு பிரிவான சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் செப்டம்பர் மாத விற்பனை திறனை குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

அதன்படி செப்டம்பர் மாத முடிவில் ஏற்றுமதி, இறக்குமதி உட்பட சுமார் 57,469 இருசக்கர வாகனங்கள் விற்றுள்ளதாக சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா கூறியுள்ளது.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

கடந்தாண்டில் இதே மாத முடிவில் 38,510 வாகனங்களை மட்டுமே அந்நிறுவனம் விற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்தாண்டில் சுசுகியின் இருசக்கர வாகன விற்பனை கூடுதலாக 32.99 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

2017 செப்டம்பர் மாத கணக்கு முடிவில், சுசுகியின் இருசக்கர வாகன தயாரிப்புகள், உள்நாட்டில் மட்டும் 50,785 என்ற எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளன.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

மீதமுள்ள 6684 வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பிறகு மற்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

சுசுகி, இந்தியா முழுவதும் 13 புதிய டீலர்ஷிப்புகளை இந்தாண்டின் தொடக்கத்தில் உருவாக்கி இருந்தது. மேலும் நாடும் முழுவதும் 467 புதிய விற்பனை மையங்களையும் அது தோற்றுவித்தது.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

இதன்காரணமாகவே செப்டம்பர் மாத கணக்கு முடிவில் சுசுகியின் இருசக்கர வாகன விற்பனை கடந்தாண்டை விட 32.99 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால், இதை குறித்துவைத்து அந்நிறுவனம் வெளியிட்ட பல மாடல்கள் நல்ல விற்பனை திறனை எட்டியுள்ளன.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

விற்பனையில் முன்னிலை பெற சுசுகி இதுபோன்ற செயல்பாடுகளை தொடர்ந்து எடுக்கும் என சுசுகியின் நிர்வாக துணைத் தலைவர் சஜீவ் ராஜசேகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

செப்டம்பர் மாத முடிவில் சுசுகி பெற்றுள்ள விற்பனை திறன், அதற்கு 2017 முதல் 2018ம் நிதியாண்டிற்கான தேவைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த உள்ளது என்பது நிதர்சனம்.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

தொடர்ந்து விழாக்கால சலுகை இந்தியாவில் தொடர வாய்ப்புள்ளதால், சுசுகி-க்கான விற்பனை திறன் மேலும் அதிகரிப்பது உறுதி என்கிறது இந்திய ஆட்டோ துறை.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

கடந்த 6 மாதங்களில் சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டிலும் சுமார் 2.81 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.

இருசக்கர வாகன பிரிவில் சுசுகி இந்தியா புதிய சாதனை..!!

இதேபோன்ற வரவேற்பு தொடர்ந்தால் 2017-18ம் நிதியாண்டின் முடிவில் 5 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை திறனை சுசுகி தயாரிப்புகள் பிடித்துவிடும்.

English summary
Read in Tamil: Suzuki India Two Wheeler Spetember Sales Grew by Almost 33 Percent. Click for Details...
Story first published: Tuesday, October 3, 2017, 11:00 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark