ரூ. 98,340 விலையில் சுசுகியின் புதிய சுசுகி இன்ட்ரூடர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

சுசுகி இன்ட்ரூடர் 150 மாடல் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் ரூ. 98,340 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

இந்த புதிய பைக் 154.9சிசி திறன் பெற்ற எஞ்சினை கொண்டுள்ளது. இதே எஞ்சின் தான் இந்தியாவில் சுசுகி வெளியிட்ட ஜிக்ஸர் 150 மாடலிலும் இடம்பெற்றுள்ளது.

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

மிகவும் நுட்பமான செயல்திறனை பெற்றுள்ள இதன்- எஞ்சின் அதிகப்பட்சமாக 14.6 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வழங்கும் என சுசுகி கூறியுள்ளது.

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்கில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த க்ரூஸர் பைக்கின் முன்பக்க சக்கரம் டிஸ்க் பிரேக் அமைப்பையும், பின்பக்க சக்கரம் ஏபிஎஸ் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

பெயர் மற்றும் டிசைன் ஆகியவற்றை எம்1800 ஆர் மாடலில் இருந்து சுசுகி இன்ட்ரூடர் 150 பெற்றுள்ளது. அதற்கான அறிகுறிகளை பைக்கின் எரிவாயு டேங் மற்றும் முக்கோண வடிவிலான முகப்பு விளக்குகள் அமைப்புகளின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

Recommended Video
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

ஒரே இருக்கை முறையை தரும் விதமான கண்ணோட்டத்தில் இருக்கும் பைக்கின் பில்லியன் இருக்கை ஸ்பிளிட் செட்-அப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

ஜிக்ஸர் 150 போல தோற்றம் அளித்துவிடக்கூடாது என்ற கோணத்தில் இன்ட்ரூடர் 150 பைக்கை சுசுகி தயாரித்துள்ளது. ரைடிங் ஸ்டைலும் இதில் மிகவும் எளிதாக இருக்கும் வகையில் உள்ளது.

Trending On Drivespark:

108 போக்குவரத்து விதிமீறல்கள் செய்த பைக் ரைடருக்கு ரூ.10,800 அபராதம்; தீவிரமாகும் 'ஆப்ரேஷன் சீட்டா'

2018 ஹோண்டா சிஆர்எஃப்1000எல் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் வெளியீடு

ரூ. 98,340 விலையில் சுசுகியின் புதிய சுசுகி இன்ட்ரூடர் 150 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!!

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

ஜிக்ஸருடைய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோலையும் சுசுகி இன்ட்ரூடர் பெற்றுள்ளது. டூயல் டோன் நிறங்களில் தோற்றம் அளிக்கும் இந்த பைக்கின் க்ரூஸர் ஸ்டைலை மெருகேற்றிக்காட்ட டபுள் பேரல் எக்ஸாஸ்ட் பைப் அமைக்கப்பட்டுள்ளது.

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

பில்லியனில் அமர்ந்து பயணிப்பவர்கள் பாதுகாப்பாக உணர ஒரே மெட்டலில் ஆன கைப்பிடி வழங்கப்பட்டுள்ளது.

பின்பகுதியில் முக்கோண டெயில் விளக்கு மற்றும் ஃபெண்டர் ஆகியவை எம்1800ஆர் பைக்கை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

க்ரூஸர் வடிவில் புதிய வரவாக களம்காணும் சுசுகி இன்ட்ரூடர் 150 பைக் பெரும்பாலும் எம்1800ஆர் மாடலை பின்பற்றியே அதன் ஸ்டைல் மற்றும் வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுசுகி க்ரூஸர் பைக் இன்ட்ரூடர் 150 விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்கிற்கு செயல் திறன் மற்றும் வடிவமைப்பில் பஜாஜ் அவென்ச்சர் கடும் போட்டியை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: Suzuki Intruder 150 Launched in India, Price Mileage Specification Images. Click for more...
Please Wait while comments are loading...

Latest Photos