முதல்முறையாக... புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

Written By:

வரும் 7ந் தேதி இன்ட்ரூடர் 150 என்ற புத்தம் புதிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளை சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் இந்திய சந்தையில் களமிறக்க உள்ளது. இந்த புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

சுஸுகி நிறுவனத்தின் இன்ட்ரூடர் 1800 உள்ளிட்ட அதிசக்திவாய்ந்த உயர்ரக மோட்டார்சைக்கிள்களின் டிசைன் தாத்பரியங்கள் இந்த மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பாக கருதலாம்.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

வித்தியாசமான எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் அமைப்பு, பெட்ரோல் டேங்க் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் வலிமையான கவுல் அமைப்பு போன்றவை மிக முக்கிய டிசைன் அம்சங்களாக இருக்கின்றன.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

பெட்ரோல் டேங்க்கில் இன்ட்ரூடர் பிராண்டை காட்டும் வகையில், இன்ட்ரூடர் பெயர் பொறித்த பட்டை பதிக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சின் கவுலும் கொடுக்கப்பட்டு இருப்பது மற்றொரு சிறப்பு.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

இவை தவிர்த்து, புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளில் அகலமான ஹேண்டில்பார், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பக்கெட் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இருக்கை அமைப்பு ஆகியவை முக்கியமான அம்சங்கள். அதேநேரத்தில், பின் இருக்கை மிகவும் சிறியதாக இருக்கிறது. சுஸுஜி ஜிக்ஸெர் பைக்கில் இருக்கும் டியூவல் போர்ட் புகைப்போக்கிதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

பின்புறத்தில் அகலமான கவுல் அமைப்பு மிரட்டுகிறது. எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விலையை சரியாக நிர்ணயிக்கும் பொருட்டு, அதிக அளவில் ஜிக்ஸெர் பைக்கில் இருக்கும் பாகங்கள் தென்படுகின்றன.

Trending On DriveSpark Tamil:

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்

டிஜிலாக்கரை போய் மோடியிடம் காட்டுங்கள்... திடுக்கிட வைத்த போலீசார்..!!

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

ஏற்கனவே வெளியான இந்த மோட்டார்சைக்கிளின் கையேட்டில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக இந்த மோட்டார்சைக்கிள் வருவது உறுதியாகி உள்ளது.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

இந்த மோட்டார்சைக்கிளில் 154.9சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். அதிகபட்சமாக 14.6 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வெளிப்படுத்தும்.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஜிக்ஸெர் பைக்குகளில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் என்றாலும், ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் சிறந்த டார்க் திறனை அளிக்கும் விதத்தில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கும்.

புதிய சுஸுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிளின் படங்கள்!

சுஸுகி நிறுவனம் சர்ப்ரைஸாக களமிறக்க இருக்கும் புதிய இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிள் நேரடியாக பஜாஜ் அவென்ஜர் 150 மோட்டார்சைக்கிளுடன் மோதும். ரூ.1 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏபிஎஸ் அல்லாத மாடல் குறைவான விலையில் வரும்.

Trending On DriveSpark Tamil:

ரூ.60 லட்சம் மதிப்புடைய சூப்பர் பைக் சென்னை வாடிக்கையாளருக்கு டெலிவிரி!

மழை வெள்ளத்திலிருந்து காரை பாதுகாக்கும் 'ப்ளட் கார்டு' கவர்

டிஜிலாக்கரை போய் மோடியிடம் காட்டுங்கள்... திடுக்கிட வைத்த போலீசார்..!!

English summary
Suzuki Intruder 150: Clear Images Reveals Design And Other Details.
Story first published: Saturday, November 4, 2017, 10:35 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark