டியோ, ஆக்டிவா-ஐ மாடல்களை விட குறைந்த விலையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

டியோ, ஆக்டிவா-ஐ மாடல்களை விட குறைந்த விலையில் சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..!!

By Azhagar

சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 'லெட்ஸ்' என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. டூயல் டோனுடன் மூன்று வித வடிவமைப்புகளில் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

இந்த ஸ்கூட்டர் மேட் பிளாக் நிறத்தை முதன்மையாக வைத்து ராயல் ப்ளூ, ஆரஞ்சு மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளேக் என்ற மூன்று வித டூயல் டோன் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

இவற்றை தவிர ஸ்கூட்டரில் மற்ற வடிவமைப்புகள் அனைத்தும் பழைய 'லெட்ஸ்' மாடல் போன்று தான் உள்ளன. கூடுதலாக இந்த புதிய வேரியன்டில், கருப்பு நிற சக்கரங்கள் கவனமீர்க்கின்றன.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

இந்த புதிய மாடலில் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புகள் ரீதியாக எந்த வித புதிய மாற்றத்தையும் பெற்றிருக்கவில்லை என சுசுகி தெரிவித்துள்ளது.

பிஎஸ்-4 112.8 சிசி எஞ்சின் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8.2 பிஎச்பி பவர் மற்றும் 8.8 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

இந்த வாகனத்தில் இடம்பெற்றுள்ள சிவிடி கியர்பாஸில் எஸ்.இ.பி தொழில்நுட்பம் உள்ளது. இது மைலேஜை அதிகரிக்க உதவும்.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் இதில் உள்ளதாகவும், அதன் மூலம் அதிகப்பட்சமாக 63 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கலாம் என்று சுசுகி தகவல் தெரிவித்துள்ளது.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ், 120மிமீ டிரம்ப் பிரேக் அமைப்பு உள்ளது. 2017 லெட்ஸ் ஸ்கூட்டரின் எரிவாயு கொள்ளவு 5.2 லிட்டராக உள்ளது.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

லெட்ஸ் ஸ்கூட்டரை பற்றி பேசிய சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் சத்தோஷி உச்சிதா,

"எங்களது தயாரிப்புகள் மூலம் எப்போதும் புதிய முயற்சிகளை உருவாக்கி வருகிறோம். அதற்கு வாடிக்கையாளர்களும் தகுந்த முறையில் ஆதரவு அளிக்கிறார்கள்” என்று கூறினார்.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

”தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் புதிய டூயல் டோன் வண்ணங்களை கொண்டு விற்பனைக்கு வரும் 2017 லெட்ஸ் ஸ்கூட்டர் நிச்சயம் சுசுகிக்கு வெற்றி தயாரிப்பாக அமையும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

முன்னர் மார்கெட்டில் இருந்த லெட்ஸ் ஸ்கூட்டரை விட மேம்படுத்தப்பட்ட மாடலான இது அழகிய தோற்றத்தோடு கவனமீர்க்கும்படியாக உள்ளது.

புதிய வடிவில் விற்பனைக்கு வந்த சுசுகி லெட்ஸ் ஸ்குட்டர்..!!

ஆக்டிவா ஐ, டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் போன்ற வாகனங்களுக்கு போட்டியாக வெளிவந்திருந்தாலும், அவற்றை விட லெட்ஸ் ஸ்கூட்டரின் விலை குறைவாக, அதாவது ரூ. 48,193 மதிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #சுசுகி #suzuki
English summary
Suzuki Motorcycle India has launched the Let's scooter with the new dual tone paint scheme. Click for the Details...
Story first published: Saturday, July 8, 2017, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X