மேம்படுத்தப்பட்ட புதிய சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மற்றும் ஹயாத் பைக் அறிமுகம்!

Written By:

ஜப்பானைச் சேர்ந்த சுசுகி நிறுவனத்தின் இந்தியப் பிரிவான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், ஜிக்சர், ஹயாத், ஸ்லிங் ஷாட் போன்ற பைக்குகள், ஆக்ஸஸ், லெட்ஸ்,ஸ்விஷ் 125 போன்ற ஸ்கூட்டர்கள், ஹயபூசா உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் சில ஏடிவி வாகனங்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

மேம்படுத்தப்பட்ட சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர், ஹயாத் பைக் அறிமுகம்!

வாகன மாசுபாட்டை தடுக்கும் முயற்சியாக புதிதாக தயரிக்கப்படும் வாகனங்களில் பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுப்பாட்டு இஞ்சின் பொருத்தப்பட வேண்டும் என்ற விதியை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அனைத்து நிறுவனங்களும் இந்த விதிமுறைகள்படி தங்களது வாகங்னங்களை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி வருகின்றன.

மேம்படுத்தப்பட்ட சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர், ஹயாத் பைக் அறிமுகம்!

இந்த வரிசையில் தற்போது சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் அதன் ‘ஹயத் ஈபி' பைக் மற்றும் ‘லெட்ஸ்' ஸ்கூட்டர் ஆகியவற்றை மேம்படுத்தி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லெட்ஸ் மற்றும் ஹயத் மாடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது சுசுகியின் அனைத்து மாடல்களும் பாரத் ஸ்டேஜ்-4 தர பைக்குகளாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர், ஹயாத் பைக் அறிமுகம்!

புதிய சுசுகி ஹயத் ஈபி பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 112.8சிசி 4 ஸ்ட்ரோக் பிஎஸ்-4 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஹச்பி ஆற்றலையும், 9.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பேர்ல் மிரா ரெட், மெட்டாலிக் ஊர்ட் கிரே மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர், ஹயாத் பைக் அறிமுகம்!

அதேபோல, புதிய சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டரில், 112சிசி பிஎஸ்-4 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.4 பிஹச்பி ஆற்றலையும் 8.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது மேட் கிரே - மேட் பிளாக், பேர்ல் பிளூ - மேட் பிளாக் மற்றும் மிரா ரெட் - மேட் பிளாக் என்ற இருவண்ண கலவையிலான நிறங்களில் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர், ஹயாத் பைக் அறிமுகம்!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லெட்ஸ் ஸ்கூட்டர் ஒற்றை மற்றும் இருவண்ண நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒற்றை கலர் மாடல் ரூ.47,272 என்ற விலையிலும், இருவண்ண மாடல் ரூ.48,272 என்ற விலையிலும் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர், ஹயாத் பைக் அறிமுகம்!

மேம்படுத்தப்பட்ட புதிய சுசுகி ஹயாத் ஈபி பைக் ரூ.52,754 என்ற விலையில் கிடைக்கிறது. அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான டாடா டிகோர் காரின் படங்களை காணுங்கள்:

English summary
ஜப்பானைச் சேர்ந்த சுசுகி நிறுவனத்தின் இந்தியப் பிரிவான சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், ஜிக்சர், ஹயாத், ஸ்லிங் ஷாட் போன்ற பைக்குகள், ஆக்ஸஸ், லெட்ஸ்,ஸ்விஷ் 125 போன்ற ஸ்கூட்டர்கள், ஹயபூசா உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் சில ஏடிவி வாகனங்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
Please Wait while comments are loading...

Latest Photos