இந்தியா சுசுகி நிறுவனம் 30 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்து சாதனை...!

Written By:

ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக இந்தியாவில் இயங்கி வரும் சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட், உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

ஹரியானா மாநிலம் குர்ஹானில் இயங்கி வரும் சுசுகி நிறுவனத்தின் ஆலையில் இந்தாண்டின் ஏப்ரல் 17ம் தேதி வரை 30 லட்சம் வாகனங்களை அந்நிறுவனம் இந்தியாவில் தயாரித்துள்ளது. இந்த சாதனையை முதன்முறையாக சூசிகி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

சுசுகி நிறுவனத்தின் கிஸ்ஸர் ரக மாடல்கள் பைக்குகளுக்கும் மற்றும் ஆக்சஸ் 125 ஸ்கூட்டர்களுக்கும் இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே மிகப்பெரிய வரவேற்பு இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்தது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

அதை பயன்படுத்தி தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்த இரு மாடல்களும் இந்தியாவில் வாடிக்கையாளிடம் வரவேற்பை தக்கவைத்துகொண்டன. இதன்மூலம் இதுவரை இல்லாத உற்பத்தி அளவை இந்தியாவில் எட்டி சுசுகி நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

உற்பத்தியில் மட்டும் உச்சத்தை தொடாமல், சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளில் புதிய தொழில்நுட்பம், தரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு வடிவமைப்புகள் ஆகியவையும் அந்நிறுவனத்திற்கு 30 லட்சம் என்ற உற்பத்தி அளவை எட்ட காரணமாக அமைந்திருக்கிறது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

தயாரிப்புகளில் மட்டும் நம்பிக்கை கொண்டுயிருக்காமல், இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே, தற்போதைய சந்தை நிலவரத்தை அறிந்து சுசுகி திறம்பட செயல்பட்டது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பெருக்கம், புதிய முகவர்கள் போன்ற செயல்பாடுகளையும் இந்தாண்டில் சுசுகி இந்தியாவில் சாத்தியமாக்கிக்கொண்டது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை என்பதோடு மட்டுமில்லாமல், இந்திய சுசுகி நிறுவனத்தால் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த எண்ணிக்கையும் இந்த சாதனை கணக்கில் அந்நிறுவனம் சேர்த்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

இதுவரை சுசுகி நிறுவனம் ஆண்டிற்கு சுமார் 5,40,000 வாகனங்களை தயாரித்து வருகிறது. தற்போது ஒட்டுமொத்தமாக தனது தயாரிப்புகளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அளவை வைத்து தொடர்ந்து சுசுகி உற்பத்தியை மேலும் உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

இந்திய சுசுகி நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, அதன் நிர்வாக இயக்குநர் சந்தோஷி உச்சிதாவிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இதைக்குறித்த கருத்து தெரித்த அவர், ஊழியர்களின் அர்ப்பணிப்பே இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் என்றார்.

உற்பத்தி அளவில் சுசுகி நிறுவனம் புதிய சாதனை

மேலும், டீலர், சப்ளையர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருக்கும் அவர், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த முக்கியம் என்றும் அதை சுசுகிக்கு வெற்றிக்கரமாக கிடைத்திருப்பதால் உளமாற அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சந்தோஷி உச்சிதா தெரிவித்திருக்கிறார்.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
The success of Gixxer series and the New Access 125 along with the other models in the scooter and big bike segments have paved the way of rolling out the third millionth vehicle in India.
Story first published: Tuesday, April 18, 2017, 11:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark