எம்வி அகஸ்டாவை தொடர்ந்து இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர் பைக் நிறுவனம்..!

Written By:

புனேவை சேர்ந்த 'கைனடிக் மோட்டார்ஸ்' முந்தைய தலைமுறையில் புகழ் பெற்ற விளங்கிய ஒரு இருசக்கர வாகன நிறுவனமாகும். கைனடிக் நிறுவனத்தின் ஹோண்டா மற்றும் லூனா மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் புகழின் உச்சியில் இருந்தன.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

எனினும் 1998ஆம் ஆண்டில் ஹோண்டா நிறுவனத்துடனான கூட்டணி நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து சில காலம் இருசக்கர வாகன சந்தையில் இருந்து இந்நிறுவனம் ஒதுங்கி இருந்தது. தற்போதும் இந்நிறுவனத்திற்கு புனேவில் சொந்தமாக ஒரு ஆலை உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

மொபட் உலகில் கொடிகட்டிப் பறந்த இந்நிறுவனம், காலப்போக்கில் மொபட் மீதான மோகம் குறைந்ததாலும், சமீபத்திய தொழில்நுட்பங்கள் கொண்ட பைக்குகளின் வரவினாலும் சந்தையை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என்று கூட கூறலாம்.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த சூப்பர் பைக் நிறுவனமான எம்வி அகஸ்டாவுடன் புதிய கூட்டணி அமைத்த இந்நிறுவனத்தின் தலைவர் அஜின்கியா ஃபிரோடியா, எம்வி அகஸ்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் இரண்டு பிரத்யேக ஷோரூம்கள் அமைத்து எம்வி அகஸ்டா நிறுவன சூப்பர் பைக்குகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

இந்நிலையில் கைனடிக் நிறுவனம் தற்போது எம்வி அகஸ்டாவைத் தொடர்ந்து மற்றொரு இத்தாலிய நிறுவனமான ‘எஸ்டபிள்யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனத்துடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

முதல்கட்டமாக எஸ்டபிள்யூஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய சூப்பர் பைக் மாடல்களை இந்தியாவில் களமிறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி எஸ்டபிள்யூஎம் சூப்பர் டியூயல்-டி மற்றும் சூப்பர் டியூயல் ஸ்போர்ட்-எக்ஸ் ஆகிய இரண்டு சூப்பர் பைக்குகள் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

இவை இரண்டுமே மிடில் வெயிட் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் பைக் வகையாகும்.

இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் ஒற்றை சிலிண்டர் கொண்ட 4-ஸ்டிரோக் 600சிசி டிஓஹச்சி இஞ்சின் இருக்கும். இது அதிகபட்சமாக 57 பிஎஸ் ஆற்றலையை வெளிப்படுத்தக் கூடியதாகும். இந்த பைக் 6 வேக கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

18 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க், முன்பக்கம் 300மிமீ மற்றும் பின்பக்கம் 220 மிமீ கொண்ட பிரெம்போ பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை ஸ்டேண்டர்ட் அம்சங்களாக இந்த பைக்குகளில் கிடைக்கும்.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

எஸ்டபிள்யூஎம் சூப்பர் டியூயல்-டி பைக்கில் முன்பக்கம், பின்பக்கம் முறையே 19 மற்றும் 17 இஞ்ச் வீல்கள் கொண்டிருக்கும். இதேபோல டியூயல் ஸ்போர்ட்-எக்ஸ் பைக்கில் முன்பக்கம், பின்பக்கம் முறையே 21 மற்றும் 18 இஞ்ச் வீல்கள் கொண்டிருக்கும்.

இந்தியாவில் களமிறங்கும் அடுத்த இத்தாலிய சூப்பர்பைக் நிறுவனம்..!!

எஸ்டபிள்யூஎம் மோட்டார்சைக்கிள் மாடல்கள் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் அறிமுகம் ஆக வாய்ப்பு உள்ளது. இவை ரூ.5 லட்சம் முதல் ரூ.6.5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil about SWM Motorcycles launch superbikes in india

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark