டிசம்பர் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 டூ வீலர்கள்!

Written By:

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஆண்டு கடைசி சேர்ந்துகொண்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இருசக்கர வாகன மார்க்கெட்டை நன்றாகவே பதம் பார்த்துவிட்டது. விற்பனையில் டாப்-10 இடங்களை பிடித்த மாடல்களின் விற்பனையே மிக மோசமான நிலையை எட்டியது.

கடந்த மாதம் இருசக்கர வாகன மார்க்கெட்டின் விற்பனை 22.04 சதவீதம் குறைந்தது. இருப்பினும், தடங்கல்களை கடந்து முதல் 10 இடங்களை பிடித்த இந்தியாவின் டாப்-10 இருசக்கர வாகனங்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. ஹீரோ பேஷன்

01. ஹீரோ பேஷன்

கடந்த மாதம் 10வது இடத்தை ஹீரோ பேஷன் பிடித்தது. கடந்த மாதத்தில் 24,672 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 55,765 பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை 56 சதவீதம் குறைந்துவிட்டது. ஹீரோ நிறுவனத்தின் முன்னணி மாடலாக இருந்த பேஷன் விற்பனை பாதியாக சரிந்திருப்பது, ஹீரோவுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

09. ஹீரோ கிளாமர்

09. ஹீரோ கிளாமர்

கடந்த மாதத்தில் ஹீரோ கிளாமர் பைக்கின் விற்பனையும் வழக்கத்தைவிட பாதியாக குறைந்தது. கடந்த 2015ம் ஆண்டில் 48,748 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 26,556 கிளாமர் பைக்குகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. கிட்டத்தட்ட 46 சதவீதம் குறைவு. ஹீரோ நிறுவனத்தின் முன்னணி மாடலான கிளாமர் விற்பனையும் ஹீரோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.

 08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

கடந்த மாதத்தில் பஜாஜ் பல்சர் பைக்கின் விற்பனை 5 சதவீதம் குறைந்தது. கடந்த மாதத்தில் 32,252 பல்சர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. சந்தைப் போட்டி அதிகரித்துள்ளதன் காரணமாக பல்சருக்கு சற்று கடினமான காலக் கட்டமாகவே இருக்கிறது.

 07. பஜாஜ் பிளாட்டினா

07. பஜாஜ் பிளாட்டினா

பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை டிசம்பரில் 108 சதவீதம் அதிகரித்தது. கடந்த மாதத்தில் 33,845 பிளாட்டினா பைக்குகள் விற்பனையாகி உள்ளன. மிக குறைவான விலையில் சிறந்த தேர்வாக பஜாஜ் பிளாட்டினா இருக்கிறது. லிட்டருக்கு 90 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுவதும் இதன் மிகப்பெரிய பலம்.

06. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

06. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

2009ம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக டாப்-10 பட்டியலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் இடம்பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 38,080 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன. 2015ம் ஆண்டு டிசம்பரைவிட கடந்த மாதம் விற்பனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது.

05. டிவிஎஸ் ஜுபிடர்

05. டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஜுபிடர் ஸ்கூட்டர் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. அதேநேரத்தில், கடந்த மாதம் விற்பனை 16 சதவீதம் குறைந்தது. கடந்த 2015ம் ஆண்டில் 47,217 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் 39,582 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் ஸ்கூட்டர் மாடலாக வலம் வருகிறது.

04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

கடந்த மாதத்தில் 64,161 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகி உள்ன. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் 56,521 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் 64,161 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது 14 சதவீதம் உயர்வு. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருவதுடன், கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதம் 9வது இடத்தை ஹீரோ டீலக்ஸ் பைக் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 85,386 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இது 9 சதவீதம் குறைவானது. அதேநேரத்தில், டிசைன், எஞ்சின், மைலேஜ் போன்றவற்றில் சிறப்பானதாகவும், குறைவான விலையில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது ஹீரோ டீலக்ஸ்.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

கடந்த மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் விற்பனையும் கடுமையாக சரிந்தது. கடந்த மாதம் 1,35,104 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையானது. ஆனாலும், இந்தியாவின் மிக விருப்பமான பைக் மாடலாக இருக்கிறது ஸ்பிளென்டர்.

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

கடந்த மாதத்தில் 1,38.480 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடும்போது விற்பனை 20 சதவீதம் குறைந்தது. வரும் மாதங்களில் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என நம்பலாம். டிசைன், செயல்திறன், மைலேஜ், விலை என அனைத்திலும் தன்னிறவை தரும் சிறந்த இருசக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது.

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிரத்யேக படங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

English summary
Despite demonetization, Royal Enfield Classic 350 broke into the top 10 selling two-wheelers in December 2016 ousting Honda CB Shine.
Story first published: Wednesday, January 25, 2017, 18:22 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos