பிப்ரவரி விற்பனையில் டாப் 20 இருசக்கர வாகனங்கள்!

Written By:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழக்க செய்யப்பட்டதையடுத்து, கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன மார்க்கெட்டில் மந்த நிலை காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் இருசக்கர வாகன விற்பனை சற்று வளர்ச்சிப் பாதையில் நோக்கி செல்ல துவங்கி இருக்கிறது.

கடந்த மாதத்தில் 13,95,418 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதில், சந்தைப் போட்டியை தாண்டி விற்பனையில் முதல் 20 இடங்கள் பிடித்த மாடல்களை காணலாம்.

 20. யமஹா ரே

20. யமஹா ரே

கடந்த மாதம் 17,279 யமஹா ரே ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. அடக்கமான வடிவிலும், தனித்துமான தோற்றத்துடன் இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும், யமஹா நிறுவனத்தின் விற்பனையில் ரே ஸ்கூட்டர் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

19. ஹீரோ டூயட்

19. ஹீரோ டூயட்

கடந்த மாதத்தில் 18,353 ஹீரோ டூயட் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. ஹீரோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்கூட்டர் மாடல் என்பதுடன், வாடிக்கையாளர் சேவையும், சர்வீஸ் வசதியும் சிறப்பாக இருக்கிறது. ஹீரோ பிராண்டின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையும் இந்த ஸ்கூட்டர் டாப் 20 பட்டியலில் இடம்பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம்.

18. ஹோண்டா சிபி யூனிகார்ன்

18. ஹோண்டா சிபி யூனிகார்ன்

ஹோண்டா யூனிகார்ன் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேர்வில் சிறப்பான இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 19,895 ஹோண்டா யூனிகார்ன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. தோற்றம், மென்மையான ஓட்டுதல் சுகத்தை தரும் எஞ்சின், சிறப்பான மைலேஜ் போன்றவை இந்த பைக்கிற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

17. ஹோண்டா டியோ

17. ஹோண்டா டியோ

இளைஞர்களின் தேர்வில் முதன்மையானதாக இருக்கிறது ஹோண்டா டியோ ஸ்கூட்டர். மிக ஸ்டைலான இந்த ஸ்கூட்டர் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 21,463 ஹோண்டா டியோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன.

16. யமஹா ஃபஸினோ

16. யமஹா ஃபஸினோ

கடந்த மாதத்தில் 22,287 யமஹா ஃபஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. மார்க்கெட்டில் உள்ள ஸ்கூட்டர்களில் இருந்து மிகவும் வேறுபட்ட டிசைன் பலரையும் கவர்ந்துள்ளது. பழமையான தோற்றத்தில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் வருவதால், நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

15. பஜாஜ் பிளாட்டினா

15. பஜாஜ் பிளாட்டினா

கடந்த மாதத்தில் 22,590 பஜாஜ் பிளாட்டினா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த மாதத்தில் 22,590 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அதிக மைலேஜ், மிக குறைவான விலையில் கிடைக்கும் நம்பகமான பஜாஜ் பைக் மாடல் என்பது இதன் ப்ளஸ்.

14. சுஸுகி ஆக்செஸ்

14. சுஸுகி ஆக்செஸ்

புதுப்பொலிவுடன் வந்த சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வில் இருந்து வருகிறது. இதனால், விற்பனை மிகவும் ஸ்திரமானதாக இருக்கிறது. கடந்த மாதத்தில் 26,795 சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. 125சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிக சிறந்த தேர்வுகளில் ஒன்றாக கூறலாம்.

 13. பஜாஜ் சிடி 100

13. பஜாஜ் சிடி 100

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பைக் மாடல்களில் ஒன்று. விலையும் குறைவு. குறிப்பாக, ஊரக பகுதிகளில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 26,886 பஜாஜ் சிடி100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

 12. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

12. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

கடந்த மாதத்தில் 32,421 மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. ஹீரோ நிறுவனத்தின் நம்பகமான ஸ்கூட்டர் மாடலாக மேஸ்ட்ரோ எட்ஜ் மாறி இருக்கிறது. ஏற்கனவே, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ரீபேட்ஜ் மாடலாக இருந்த இந்த ஸ்கூட்டர் தற்போது மேஸ்ட்ரோ எட்ஜ் என்ற புதிய மாடலாக விற்பனை செய்யப்படுகிறது.

11. டிவிஎஸ் ஸ்போர்ட்

11. டிவிஎஸ் ஸ்போர்ட்

கடந்த மாதத்தில் 34,174 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. பஜாஜ் சிடி100 போன்றே இந்த பைக்கும் ஊரக பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மோசமான கிராமப்புற சாலைகளுக்கு ஏற்ற கட்டுறுதியான பைக் மாடலாக இருக்கிறது. விலையும் குறைவு என்பது இதன் ப்ளஸ்.

 10. பஜாஜ் பல்சர் 150சிசி

10. பஜாஜ் பல்சர் 150சிசி

கடந்த மாதத்தில் 36,542 பஜாஜ் பல்சர் 150சிசி பைக்குகள் விற்பனையாகி உள்ளன. தோற்றம், செயல்திறன், மைலேஜ் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து சுண்டி இழுத்து வருகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

09. ஹீரோ கிளாமர்

09. ஹீரோ கிளாமர்

கடந்த மாதத்தில் 39,288 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. மென்மையான எஞ்சின் மற்றும் நம்பகமான ஹீரோ பிராண்டில் வரும் மோட்டார்சைக்கிள் என்பது இதன் ப்ளஸ்.

 08. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

08. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து அசத்தி வருகிறது. கடந்த மாதத்தில் 40,768 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன. ஆஜானுபாகுவான தோற்றமும், அலாதியான சைலென்சர் சப்தமும் இந்த பைக்கின் ரசிகர்களை உயர்த்தி வருகிறது.

 07. டிவிஎஸ் ஜூபிடர்

07. டிவிஎஸ் ஜூபிடர்

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தி வருகிறது டிவிஎஸ் ஜுபிடர். கடந்த மாதத்தில் 51,817 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக இருக்கிறது.

06. ஹோண்டா சிபி ஷைன்

06. ஹோண்டா சிபி ஷைன்

125 சிசி பைக் மார்க்கெட்டில் மிக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது ஹோண்டா சிபி ஷைன். இதன் ஸ்மூத்தான எஞ்சினும், வசதியாக ஓட்டுவதற்கான சிறந்த ரைடிங் பொசிஷனும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் 66,402 ஹோண்டா சிபி ஷைன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து, ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

 05. ஹீரோ பேஷன்

05. ஹீரோ பேஷன்

கடந்த மாதத்தில் 69,763 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. டிசைன், எஞ்சின், மைலேஜ், விலை என அனைத்திலும் தன்னிறவை தரும் பைக் மாடல்.

04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

கடந்த மாதத்தில் 77,053 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகி உள்ளன. 4 ஸ்ட்ரோக் எஞ்சின் மாடல் வந்த பிறகு விற்பனை மிகச் சிறப்பாக உயர்ந்து வருகிறது. மலிவு விலையில் சிறந்த போக்குவரத்து சாதனமாக இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தகர்களுக்கு சிறந்த போக்குவரத்து சாதனமாகவும் விளங்குகிறது.

 03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதத்தில் 1,21,902 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகி உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் மிக குறைவான விலை பைக் மாடல் என்பது இதன் ப்ளஸ். அத்துடன், சிறந்த மைலேஜையும், சிறந்த எஞ்சினுடன் கிடைப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

கடந்த மாதம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரிடம் நம்பர்-1 இடத்தை இழந்தது ஹீரோ ஸ்பிளென்டர். கடந்த மாதத்தில் 2,08,571 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. மென்மையான ஓட்டுதல் சுகம், நம்பகமான பிராண்டாக தொடர்ந்து வலம் வருகிறது ஹீரோ ஸ்பிளென்டர்.

 01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

கடந்த மாதத்தில் நம்பர் 1 இடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பிடித்தது. கடந்த மாதத்தில் 2,17,098 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. செயல்திறன், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பானதாகவும், மறு விற்பனை மதிப்பிலும் நம்பர்-1 மாடலாக இருக்கிறது ஹோண்டா ஆக்டிவா. எனவே, கண்ணை மூடிக்கொண்டு வாங்குவதற்கான ஸ்கூட்டர் மாடலாக பரிந்துரைக்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Top 20 Best Selling Two Wheelers In India February 2017.
Story first published: Friday, March 24, 2017, 17:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark