ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 2017ம் ஆண்டின் 5 சிறந்த பைக் மாடல்கள்!

2017ம் ஆண்டில் ஒரு லட்ச ரூபாய் மார்க்கெட்டில் இந்தியாவின் 5 சிறந்த பைக் மாடல்களை தேர்வு செய்து வழங்கி இருக்கிறோம்.

By Saravana Rajan

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட் மார்க்கெட்டில் ஏராளமான பைக் மாடல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால், வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வு வாய்ப்பு கிடைக்கிறது. அதில், 5 சிறந்த பைக் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

01. சுஸுகி ஜிக்ஸெர்

01. சுஸுகி ஜிக்ஸெர்

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட் மார்க்கெட்டில் இளைஞர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் மாடல் சுஸுகி ஜிக்ஸெர். இந்த பைக் நேக்கட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக மாடல்களில் கிடைக்கிறது. இதன் நீல வண்ண மாடல் முத்தாய்ப்பாக இருக்கிறது. வடிவமைப்பு, செயல்திறன், ஓட்டுதல் தரம், விலை என அனைத்துமே வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவையும், சிறந்த தேர்வாகவும் அமைந்துள்ளது.

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 2017ம் ஆண்டின் 5 சிறந்த பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் இருக்கும் 155சிசி எஞ்சின் அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கில் டிஸ்க் பிரேக் மாடலும், ஜிக்ஸெர் எஸ்எஃப் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலில் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனல் வசதியாகவும் கிடைக்கிறது. நேக்கட் மாடல் ரூ.81,180 விலையிலும், எஸ்எஃப் மாடல் ரூ.96,456 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

02. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி

டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான அப்பாச்சி பிராண்டில் அறிமுகமான இந்த பைக் மாடல் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வடிவமைப்பு, விலை மற்றும் சிறப்பம்சங்களில் நிறைவான பைக் மாடல். இந்த பைக்கில் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் மற்றும் பைரெல்லி டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதன் ரகத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட முதல் மாடல் என்பதும் சிறப்பு.

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 2017ம் ஆண்டின் 5 சிறந்த பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் இருக்கும் 197.75சிசி எஞ்சின் அதிகபட்சமாக 20.23 பிஎச்பி பவரையும், 18.1 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மாடலிலும் கிடைக்கிறது. 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. மணிக்கு 127 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையை பெற்றிருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இல்லாதது ஏமாற்றம்.

ரூ.93,305 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. வழக்கம்போல் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க டிவிஎஸ் மாடல் என்ற சிறப்புகளை பெற்றிருக்கிறது.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
03. பஜாஜ் பல்சர் 200என்எஸ்

03. பஜாஜ் பல்சர் 200என்எஸ்

200சிசி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்று பஜாஜ் பல்சர் 200என்எஸ் பைக். முரட்டுத்தனமான தோற்றம், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த பைக்கிற்கு தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்று தந்துள்ளது. அனைத்து கால நிலைகளிலும், சாலை நிலைகளிலும் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 2017ம் ஆண்டின் 5 சிறந்த பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் இருக்கும் அதே199.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இது ட்ரிப்பிள் ஸ்பார்க் நுட்பத்தை பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 23.17 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. மிக விரைவான செயல்திறனை வெளிப்படுத்துவது இதன் முக்கிய சிறப்பு. ரூ.97,201 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மாடல் ஒரு லட்ச ரூபாய்க்கும் சற்று அதிகமான பட்ஜெட்டிற்குள் செல்கிறது.

04. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்

04. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் மிகச் சிறந்த மாடலாக கூற முடியும். டிசைன், அருமையான எஞ்சின், விலை போன்றவற்றில் நிறைவை தருகிறது. குறிப்பாக, மிக சவாலான விலை இதற்கு வலு சேர்க்கிறது. இந்த பைக்கின் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் சிறந்த பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது.

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 2017ம் ஆண்டின் 5 சிறந்த பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் இருக்கும் 162.71 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 15.04 பிஎச்பி பவரையும், 14.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 140 கிலோ எடை கொண்டது. 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது. தினசரி பயன்பாட்டிற்கு மிகச் சிறந்த மாடல். ரூ.86,867 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

05. பஜாஜ் அவென்ஜர் 220

05. பஜாஜ் அவென்ஜர் 220

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் பஜாஜ் அவென்ஜர் 220. மிகச் சிறந்த க்ரூஸர் ரக டிசைன், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சவுகரியமான ரைடிங் பொசிஷன், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப ட்யூன் செய்யப்பட்ட எஞ்சின் ஆகியவை இதன் முக்கிய சிறப்பு. அத்துடன் மிக மிக சவாலான விலையில் கிடைக்கிறது.

ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 2017ம் ஆண்டின் 5 சிறந்த பைக் மாடல்கள்!

இந்த பைக்கில் இருக்கும் 220சிசி எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 17.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் விற்பனைக்கு வந்த சுஸுகி இன்ட்ரூடெர் 150 க்ரூஸர் பைக்கைவிட இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவே தொடர்ந்து போட்டி போடுகிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மாடல்கள் வரிசைப்படுத்தப்பட வில்லை. மாறாக, ஒவ்வொருவரின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் பட்டியலிட்டு இருக்கிறோம். இந்த பைக்குகளில் உங்களுக்கு மனம் கவர்ந்த மாடலை தேர்வு செய்து, ஓட்டி பார்த்த பிறகு தேர்வு செய்து கொள்ளலாம்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #டாப் 5 #top 5
English summary
Top 5 Motorcycles in 2017 Under Rs 1 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X