இந்திய வாகன சந்தையில் 2017ல் வெளியாகி விற்பனையில் நின்று விளையாடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

இந்திய வாகன சந்தையில் 2017ல் வெளியாகி விற்பனையில் நின்று விளையாடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

By Azhagar

2017ம் ஆண்டு விரைவில் விடைபெறவுள்ளது. இந்தாண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு சிறப்பான வருடமாக அமைந்துள்ளது.

கார், பைக் என இந்திய வாகன சந்தை சிறப்பான வணிக கட்டத்தில் இருந்தாலும், 2017ம் ஆண்டில் ஸ்கூட்டர் விற்பனை இமலாய சாதனை புரிந்துள்ளது.

ஒகினாவா பிரெய்ஸ

ஒகினாவா பிரெய்ஸ

குர்கான் நகரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் கால் பதித்துள்ள ஜப்பானை சேர்ந்த ஒகினவா, தனது மின்சார பிரெய்ஸ் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்தது.

ரூ. 59,889 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலைப்பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 170 முதல் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

150 கிலோ வரை எடை சுமந்த செல்லும் இந்த மின்சார ஸ்கூட்டரில் அசிஸ்ட் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சமாகவும் உள்ளது.

ஹோண்டா கிராஸியா

ஹோண்டா கிராஸியா

இந்தாண்டில் இறுதியில் ஹோண்டா வெளியிட்ட கிராஸியா மாடல், பல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.

Recommended Video

The Best Two Wheeler Brand In India Is Honda - DriveSpark
2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

ரூ. 57,897 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்த ஹோண்டா கிராஸியா, தொழில்நுட்ப தேவை மற்றும் செயல்திறனிலும் மிரட்டுகிறது.

டூயல்-டோன் நிறங்கள், கிரோம் வடிவமைப்புகள், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ரீமியம் தர ஸிவிட்ச் கியர்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

Trending On Drivespark:

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

இந்தியாவின் அதிக விலைக்கொண்ட ஸ்கூட்டரான கிராஸியா 124.9 சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை பெற்றுள்ளது. இது 8.52 பிஎச்பி பவர் மற்றும் 10.54 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹோண்டா கிளிக்

ஹோண்டா கிளிக்

2017ல் கவனமீர்த்த புதிய ஸ்கூட்டர்களில் ஹோண்டாவின் தயாரிப்புகளே அதிக இடம்பிடிக்கின்றன. அந்தவகையில் ஊரக பகுதிகளுக்கான வாகனமாக ஹோண்டா தயாரித்த ஸ்கூட்டர் தான் கிளிக்.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

ஊரக மற்றும் பாதி நகரப்புற பகுதிகளுக்கான வாகனமான கிளிக் பார்க்க மிகவும் முரட்டுதனமாகவும், எந்தவித சாலைகளிலும் செல்லும் தேவையுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

கிளிக் ஸ்கூட்டரில் உள்ள டூப்லெஸ் டயர்கள், அதிக எடை தாங்கக் கூடிய வகையில் உள்ளது. பயணிப்பதற்கான தேவையுடன், சில வணிக தேவைகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

ஆக்டிவா 4ஜி மாடலை விட எடை குறைந்திருந்தாலும், இதனுடைய டேங்க் கொள்ளவு 3.5 லிட்டர். ரூ.42,384 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) மதிப்பில் வெளியான இந்த ஸ்கூட்டர் விற்பனையில் தொடர்ந்து சக்கைப்போடு போட்டு வருகிறது.

டிவிஎஸ் ஜுப்பிட்டர் கிளாசிக் எடிசன்

டிவிஎஸ் ஜுப்பிட்டர் கிளாசிக் எடிசன்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட்ட மேம்படுத்தப்பட்ட ஜுப்பிட்டர் கிளாசிக் எடிசன் ஸ்கூட்டர், 2017ம் ஆண்டில் வாகன விற்பனையில் தனிக்கவனத்தை ஈர்த்தது.

இந்த மாடலில் எஞ்சின் செயல்திறன் அப்படியே இருக்க, டூயல் டோன் இருக்கைகள், யுஎஸ்பி சார்ஜர், கிரோமிலான பின் இருக்கை என தோற்றப்பொலிவில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

110சிசி திறன் பெற்ற சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் டிவிஎஸ் ஜுப்பிட்டர் கிளாசிக் எடிசனில் உள்ளது. இது 7.9 பிஎச்பி பவர் மற்றும் 8 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ரூ. 55,466 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை பெறும் டிவிஎஸ் ஜுப்பிட்டர் கிளாசிக் ஸ்கூட்டர், அட்டகாசமான பத்து நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 4ஜி

ஹோண்டா ஆக்டிவா 4ஜி

அந்தவகையில் துவக்கத்தில் வெளிவந்த ஹோண்டா ஆக்டிவா 4ஜி முதல் சமீபத்தில் வெளியான மின்சார ஸ்கூட்டர் ஓகினாவா வரை, 2017ல் விற்பனையிலும், தயாரிப்பிலும் கலக்கிய 5 முக்கிய ஸ்கூட்டர்கள் குறித்த பிரதான தகவல்களை பார்க்கலாம்.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஹோண்டா இருசக்கர வாகன தயாரிப்பு பிரிவான HMSI வெளியிட்ட ஸ்கூட்டர் தான் ஹோண்டா ஆக்டிவா 4ஜி. 110சிசி திறன் பெற்ற இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா மாடல் வரிசையில் வெளிவந்த 10வது தலைமுறைக்கான ஸ்கூட்டர்.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

109சிசி, சிங்கிள்-சிலிண்டர் கொண்ட ஆக்டிவா 4ஜி எஞ்சின், 8 பிஎச்பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் பிஎஸ் 4 தரக்கட்டுபாட்டில் இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் இயங்குகிறது.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

ரூ. 51,324 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனையாகும் ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரில், ஒருகிணைந்த பிரேக்கிங் அமைப்பு மற்றும் கைப்பேசியை சார்ஜ் செய்யும் வசதி போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

2017ல் வெளியாகி விற்பனையில் கலக்கிய டாப் 5 ஸ்கூட்டர்கள்..!!

2017ல் வெளியான புதிய ஸ்கூட்டர்கள் பல செயல்திறன் மற்றும் வடிவமைப்பு சார்ந்து தேவைகளில் பல சிறப்பான தேவைகளை பூர்த்தி செய்கிறது.

சிறப்பான தோற்றத்தோடு, செயல்திறனிலும் இந்த ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
English summary
Read in Tamil: Top 5 Scooter Launches Of India in 2017. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X