ரூ.4 லட்சத்திற்குள் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பட்டியல்!!

ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் பைக் மார்க்கெட் மிக ஸ்திரமான வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை ஓட்டி பார்த்தவர்கள் இப்போது சற்று கூடுதல் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை நோக்கி தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.

இதனால், 250சிசி முதல் 500சிசி இடையிலான ரகத்தில் இப்போது பல நல்ல தேர்வுகள் இருக்கின்றன. இந்த செக்மென்ட்டில் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

 01. கவாஸாகி நின்ஜா 300

01. கவாஸாகி நின்ஜா 300

சூப்பர் பைக்கை ஓட்டும் கனவுடன் துவங்குபவர்களுக்கு மிக சரியான சாய்ஸ். மதிப்புமிக்க பிராண்டாகவும், சிறந்த டிசைன் அம்சங்களையும் கவாஸாகி நின்ஜா 300 பைக் பெற்றிருக்கிறது.

ரூ.4 லட்சத்திற்குள் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பட்டியல்!!

இந்த பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 296சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 38.5 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரூ.3.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இரட்டை ஹெட்லைட் அமைப்பு, இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த விலையில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாதது பெரும் குறை.

 02. யமஹா ஒய்இசட் ஆர்3

02. யமஹா ஒய்இசட் ஆர்3

நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் யமஹா பிராண்டுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. மிரட்டலான டிசைன், கவர்ச்சியான வண்ணக் கலவையுடன் இந்தியா வந்த இந்த பைக்கும் மிகச் சிறந்த மாடலாக விளங்குகிறது.

ரூ.4 லட்சத்திற்குள் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பட்டியல்!!

இந்த பைக்கில் 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 321சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடைமுறை பயன்பாட்டுக்கு மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கும். இதுவும் இரட்டை ஹெட்லைட் அமைப்பு கொண்டிருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் செட் அப்தான் உள்ளது. ரூ.3.26 லட்சம் விலையில் கிடைக்கிறது.

03. ஹயோசங் ஜிடி 250ஆர்

03. ஹயோசங் ஜிடி 250ஆர்

இந்த செக்மென்ட்டில் கிடைக்கும் மற்றொரு பிரிமியம் பிராண்டு மோட்டார்சைக்கிள். போட்டியாளர்களைவிட மிக பிரம்மாண்டமான டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

ரூ.4 லட்சத்திற்குள் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பட்டியல்!!

இந்த மோட்டார்சைக்கிளில் 249சிசி வி-ட்வின் சிலிண்டர் அமைப்புடைய எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 28 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 140 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. ரூ. 3 லட்சம் விலை கொண்டது.

04. கேடிஎம் ஆர்சி390

04. கேடிஎம் ஆர்சி390

இந்திய இளைஞர்களின் நம்பர்-1 சாய்ஸாக உள்ளது. இதற்கு பல காரணங்கள். கவர்ச்சியான டிசைன், சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள், போட்டியாளர்களைவிட குறைவான விலை என்பது இந்த பைக்கின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரூ.4 லட்சத்திற்குள் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பட்டியல்!!

இந்த பைக்கில் 373சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 43 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் டியூவல் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்லிப்பர் க்ளட்ச், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. ரூ.2.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. மேலே பார்த்த போட்டியாளர்களைவிட கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க பைக் மாடலாக கேடிஎம் ஆர்சி 390 பைக் விளங்குகிறது.

05. டிஎஸ்கே பெனெல்லி டொர்னாடோ 302

05. டிஎஸ்கே பெனெல்லி டொர்னாடோ 302

பெனெல்லி ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக் மாடல்களுக்கு குறுகிய காலத்தில் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய டொர்னாடோ 302 பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது பெனெல்லி.

ரூ.4 லட்சத்திற்குள் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பட்டியல்!!

பெனெல்லி டொர்னாடோ 302 பைக்கில் இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 302 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 34.9 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்றும், ரூ.3.20 லட்சத்தில் களமிறக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

06. டிவிஎஸ் அகுலா 300

06. டிவிஎஸ் அகுலா 300

டிவிஎஸ் அகுலா 300 ஸ்போர்ட்ஸ் மிக தீவிரமான சாலை சோதனை ஓட்டங்களில் இருக்கிறது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் அடிப்படையிலான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் டிவிஎஸ் பிராண்டில் வெளிவருகிறது.

ரூ.4 லட்சத்திற்குள் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பட்டியல்!!

இந்த பைக்கில் இருக்கும் 313சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மிக வலிமையான தோற்றம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும். ரூ.2 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இந்த புதிய பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த தேர்வு

சிறந்த தேர்வு

இந்த பட்டியலில் தற்போதைக்கு விற்பனையில் உள்ள மாடலில் டிசைன், செயல்திறன், சக்திவாய்ந்த எஞ்சின், பாதுகாப்பு, நடைமுறை பயன்பாடு என அனைத்திலும் கேடிஎம் ஆர்சி390 பைக் சிறந்த தேர்வாக இருக்கிறது. தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும், பிராண்டு மதிப்பின் அடிப்படையில் உங்களது தேர்வு மாறுபடலாம்.

புதிய டெஸ்லா மாடல் எக்ஸ் காரின் படங்கள்!

புதிய டெஸ்லா மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Top Sports Bikes Between 2 To 4 Lakhs in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X