அட்டகாசமான தொழில்நுட்பத்தில் டிரையம்பின் தயாரிப்பில் போனவில்லே பாபர்

Written By: Azhagar

டிரையம்ப் நிறுவனத்தின் புதிய படைப்பான போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

முதலில் தலைநகரான டெல்லியில் விற்பனைக்கு வரும் போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிள், இங்கு ரூ.12 லட்சம் விலைக்கு விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

மோட்டார் சைக்கிளை தாங்கி நிற்கும் கேஸிஸ் என்ற பாகம் புதியதாக உருவாக்கப்பட்டு இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய சஸ்பென்சன் கொடுக்கப்பட்டு முன்னர் டிரையம்ப் வெளியிட்ட போனவில்லே T120 வண்டியின் எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரியளவில் வியாபார வட்டத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ள டிரையம்ப் இதை வெளியிட பல்வேறு ப்ரோமோஷன் யுக்திகளில் களமிறங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக இணையதளங்களில் கலக்கி வரும் போனவில்லே பாபர் வண்டியின் அறிமுக காட்சி பதிவை பாருங்கள்...

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

இந்த வீடியோவை பார்த்தவுடன் நிச்சயம் பைக்கின் மீது ஒரு சிலிர்ப்பு ஏற்படத்தான் செய்கிறது. மோட்டார் சைக்கிளின் தோற்றப் பொலிவின் மீது மட்டும் கவனத்தை செலுத்தாமல், வண்டியின் உருவாக்குதலின் பின்னணியிலும் பல்வேறு அம்சங்கள் உள்ளதை நாம் இந்த காட்சிப் பதிவில் அறிந்துக்கொள்ள முடிகிறது.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

வண்டி கரடுமுரடான சாலைகளில் பயணிக்கும்போது, பின்பகுதியில் சஸ்பென்சனின் திறனை சரியாக தக்கவைத்துக்கொள்ள உதவும் swingarm, அதற்கான செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்பாடமல் பாதுகாக்கும் மோனோ ஷாக் ஆகிய அமைப்புகள் போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளில் பாராட்டப்படக்குடிய அம்சங்களாக உள்ளன.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

முன்பே குறிப்பிட்டது போல டிரையம்ப வெளியிட்ட போனவில்லே T120 பைக்கின் எஞ்சின் தான் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் இணையொத்த இரண்டு அமைப்பில் 1200சிசி பவர் தரக்கூடிய திறன் கொண்டதாகும்.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

1200சிசி எஞ்சின் மூலம் போனவில்லே பாபர் வண்டியில் 76 பி.எச்.பி பவர் மற்றும் 106 என்.எம் டார்க் திறனும் அதிகப்பட்சமாக நமக்கு கிடைக்கும்.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

மேலும் 'ரைட் பை வயர்' என்ற தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டர் சைக்கிளில், இரண்டு விதமான பயணங்களை நாம் மேற்கொள்ளலாம். மழை மற்றும் சாலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டியிருக்கும் வசதிகளை பயன்படுத்தி 'ரைட் பை வயர்' தொழில்நுட்பத்தில் பைக்கை நாம் ஓட்டமுடியும்.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது எதிர்பாராத விதமாக ஸ்கிட் செய்ய நேர்ந்தாலோ அல்லது திடீரென பிரேக் செய்ய நேர்ந்தலோ, அப்போது ரைடருக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க ஆண்டி- லாக் பிரேக் அமைப்பு உள்ளது. அதேபோல குறைந்த உராய்வு கொண்ட சாலையில் இழுவையை (traction) சரியாக கட்டுப்படுத்தும் டிரேக்‌ஷன் கண்டோல் வசதியும் உள்ளது.

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் விலை என்ன?

மிதமான வானிலையில் பயணிக்கும்போது, ரைடருக்கு இதமான தட்பநிலையை வழங்கும் heated grips, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சீரான வேகத்தை பராமரிக்க க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளில் அட்டகாசமாக உள்ளது.

வாசகர்கள் படித்து வரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்

போனவில்லே பாபர் மோட்டார் சைக்கிளின் இன்னும் பல புதிய புகைப்படங்களை கேலரியின் பாருங்கள்

English summary
Triumph will launch the Bonneville Bobber in India by March or early April 2017. The Bonneville Bobber shares its engine with the Bonneville T120.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark