புதிய டிரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

Written By:

டிரையம்ஃப் டி120 மோட்டார்சைக்கிளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாடல். பலர் மோட்டார்சைக்கிளை வாங்கி வெளியில் கஸ்டமைஸ் செய்து கொள்கின்றனர். அதுபோன்று கஸ்டமைஸ் செய்ய பிரியப்படுபவர்களுக்காகவே டிரையம்ஃப் நிறுவனம் உருவாக்கிய மாடல் இது.

புதிய டிரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

டிரையம்ஃப் டி120 மோட்டார்சைக்கிளின் சேஸியை பின்புறத்தில் கத்தரித்து, இருக்கையுடன் முடித்துள்ளனர். தாழ்வான ஓட்டுனர் இருக்கை அமைப்பு, பிரத்யேக ஹேண்டில்பார், மோனோஷாக் அப்சார்பர் போன்றவற்றுடன் கஸ்டமைஸ் மாடல் போன்று மாறி இருக்கிறது.

புதிய டிரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

டிரையம்ஃப் டி120 மோட்டார்சைக்கிளின் எஞ்சின் இந்த மோட்டார்சைக்கிளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், சற்று மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் இருக்கும் 1,200சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 106 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

புதிய டிரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளில் டார்க் அசிஸ்ட் க்ளட்ச் சிஸ்டம், ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், ரோடு மற்றும் ரெயின் என இருவிதமான இயங்கு நிலைகளில் வைத்து ஓட்டுவதற்கான வசதி டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

புதிய டிரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

228 கிலை எடை கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் தரும் என்று டிரையம்ஃப் நிறுவனம் தெரிவிக்கிறது. அதிசக்திவாய்ந்த இந்த எஞ்சின், இந்தளவு மைலேஜ் தரும் என்பதே குறிப்பிட வேண்டிய விஷயம்.

புதிய டிரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த மோட்டார்சைக்கிளை இன்னும் அலங்கரித்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் டிரையம்ஃப் வழங்குகிறது. மொத்தம் 150 விதமான ஆக்சஸெரீகளை இந்த மோட்டார்சைக்கிளுக்கு டிரையம்ஃப் நிறுவனம் ஆப்ஷனலாக வழங்குகிறது.

புதிய டிரையம்ஃப் போனிவில் பாபர் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.9.09 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

English summary
Read in Tamil: The Triumph Bonneville Bobber launched in India, the company’s first factory custom that is all set to take the term ‘classic’ to the next level.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark