Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள்-எஸ் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!
இங்கிலாந்தின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான டிரையம்ப், இந்தியாவில் புதிதாக ஸ்ட்ரீட் டிரிபிள்-எஸ் என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டிரையம்ப் நிறுவனம் ஸ்டிரீட் டிரிபிள் எஸ் பைக்கை முந்தைய மாடலில் இருந்து இஞ்சின் முதல் தோற்றம் வரை முற்றிலும் புதிதாக மேம்படுத்தியுள்ளது. புதிய கிராங்க், பிஸ்டன் என 80 புதிய பாகங்கள் கொண்ட புதிய இஞ்சின் இதில் இடம்பெற்றுள்ளது.

புதிதாக அறிமுகமாகியுள்ள டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள்-எஸ் பைக், எஸ் வேரியண்டில் ஆரம்ப விலை கொண்ட பைக் ஆகும்.

புதிய டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள்-எஸ் பைக்கில் புதிய இஞ்சின், மெருகூட்டப்பட்ட்ட டிசைன், எடை குறைவான சேஸிஸ் மற்றும் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளது.

இது ஒரு மிடில் வெயிட் ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும். டிரையம்ப் பைக்குகளிலேயே எடை குறைவானதும் இந்த பைக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த எடை 166 கிலோ ஆகும்.

இதில் இரு ஹெட்லைட் அமைப்பு, எல்சிடி இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், இருபுறமும் ஷோவா சஸ்பென்சன் அமைப்பு ஆகியவை உள்ளது.

2017 டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள்-எஸ் பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 765சிசி லிக்விட் கூல்டு டேய்டோனா இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 111 பிஹச்பி ஆற்றலையும், 73 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த புதிய இஞ்சின் 30% கூடுதல் டார்க்கை வழங்குகிறது.

புதிய ஸ்ட்ரீட் டிரிபிள்-எஸ் பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டேண்டர்ட் அம்சமாக இடம்பெற்றுள்ளது. முன்புறம் நிசின் 2-பிஸ்டன் கேலிபரும், பின்புறம் சிங்கில் பிஸ்டன் பிரெம்போ கேலிபரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டிராக்ஷன் கண்ட்ரோலும் இடம்பெற்றுள்ளது.

இந்த பைக்கில் 17.4 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கின் நீளம் 2065 மிமீ , உயரம் 1060 மிமீ, வீல்பேஸ் 1410 மிமீ ஆகவும் உள்ளது.

2017 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபிள்-எஸ் பைக் ரூ.8.50 லட்சம் (டெல்லி, எக்ஸ்ஷோரூம்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

2017 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபிள்-எஸ் பைக் ரூ.8.50 லட்சம் (டெல்லி, எக்ஸ்ஷோரூம்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள்-எஸ் பைக்கில் 3 சிலிண்டர்கள் கொண்ட 765சிசி லிக்விட் கூல்டு டேய்டோனா இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 111 பிஹச்பி ஆற்றலையும், 73 என்எம் டார்க்கையும் வழங்குகிறது