2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

Written By:

இத்தாலியின் மிலன் நகரில் துவங்கி இருக்கும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ட்ரையம்ஃப் நிறுவனத்தின் புதிய டைகர் 800 எக்ஸ்சி, எக்ஸ்ஆர் அட்வென்ச்சர் ரக பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

ஆஃப்ரோடு பிரியர்களுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட இந்த பைக்குகளில் 200விதமான புதிய மாற்றங்களை செய்துள்ளதாக ட்ரையம்ஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து படிக்கலாம்.

2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

ஆஃப்ரோடுகளை சமாளிக்க ஏதுவாக, எக்ஸ்சி 800 மாடலில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரங்களும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரங்களுடன் டபிள்யூபி சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்ஆர் மாடலில் முன்புறத்தில் 19 அங்குல சக்கரங்களும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரங்களும் இருக்கின்றன. இந்த மாடலில் ஷோவா சஸ்பென்ஷன் உள்ளது.

2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

எக்ஸ்சிஎக்ஸ், எக்ஸ்சிஏ மாடல்கள் முழுமையான ஆஃப்ரோடு வேரியண்ட்டுகளாகவும், எக்ஸ்ஆர், எக்ஸ்ஆர்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஆர்டி மாடல்கள் சாதாரண சாலைகளில் பயன்படுத்தும் விதத்தில் சிறப்பம்சங்களை பெற்றுள்ளன. இதில், எக்ஸ்ஆர்எக்ஸ் மாடலில் இருக்கை உயரம் 50மிமீ வரை தாழ்வாக இருக்கிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] Triumph Street Triple RS Launched In India - DriveSpark
2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

இந்த புதிய பைக்கில் புதிய தலைமுறை அம்சங்கள் கொண்ட மூன்று சிலிண்டர் எஞ்சின் இடம்பெற்று இருக்கும். ஆனால், அதிகபட்ச பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் திறனில் மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது.

2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

புதிய ட்ரையம்ஃப் டைகர் 800 வரிசை மாடல்கள் தோற்றத்தில் புதுப்பொலிவுடன், புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த பைக்குகளில் 5 ஸ்டேஜ் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட விண்ட்ஸ்கிரீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், கன்ட்ரோல் பேட் மற்றும் ஜாய் ஸ்டிக் அமைப்புடன் கூடிய கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன.

2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

தற்போதைய ட்ரையம்ஃப் டைகர் 800 பைக்குகளைவிட எடையும் வெகுவாக குறையும். இதனால், ஆஃப்ரோடுகளில் மிக எளிதாக இந்த பைக்கை கையாளும் வாய்ப்பு ஓட்டுபவருக்கு கிடைக்கும்.

2018 ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்சி, எக்ஸ்ஆர் பைக்குகள் அறிமுகம்!

புஷ் பட்டன் வசதியுடன் எளிதாக இயக்கக்கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பிரெம்போ பிரேக்குகள், ஆஃப்ரோடு ரைடிங் மோடு உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள். குளிர் நேரத்தில் வெதுவெதுப்பை தரும் இருக்கை வசதி உள்ளிட்ட பல சிறப்பு ஆக்சஸெரீகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

English summary
Triumph Tiger 800 XC and XR Unveiled At EICMA.
Story first published: Tuesday, November 7, 2017, 15:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark