புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்

Written By:

சாகசங்களுக்கான ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்- விபரம்!

ஏற்கனவே பிஎஸ்-3 ட்ரையம்ஃப் எக்ஸ்சி பைக் விற்பனையில் இருந்து வந்தது. இந்த நிலையில், அரசின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ்சி பைக் வந்துள்ளது.

புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்- விபரம்!

இந்த பைக்கில் பழைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1215சிசி எஞ்சின் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், புதிய புகைப்போக்கி அமைப்பும் கொடுக்கப்ப்டடு இருக்கிறது. இதன்மூலமாக, பிஎஸ்-4 தரத்திற்கு மேம்பட்டிருப்பதுடன், சப்தமும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்- விபரம்!

இந்த பைக்கில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 137பிஎச்பி பவரையும், 123என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட 2பிஎச்பி கூடுதல் பவரையும், 2என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்- விபரம்!

இந்த பைக்கில் ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட், கம்ஃபோர்ட் மற்றும் நார்மல் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மல்டி- சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் போன்ற தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்- விபரம்!

ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎஸ்எக்ஸ் பைக்கில் எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்படும் செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன் இடம்பெற்றிருக்கிறது. இதில், சாதாரண சாலை மற்றும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ப 9 விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

இந்த பைக்கில் 5 வோல்ட் யுஎஸ்பி சாக்கெட் மற்றும் 12 வோல்ட் பவர் சாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வெப்பப்படுத்தும் வசதி கொண்ட இருக்கைகள், எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட்டபிள் விண்ட்ஸ்க்ரீன் போன்ற வசதிகளும் உள்ளன.

புதிய ட்ரையம்ஃப் டைகர் எக்ஸ்ப்ளோரர் எக்ஸ்சிஎக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்- விபரம்!

இந்த புதிய பைக் மாடல் ரூ.22 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ.18.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 1200 என்டியூரோ மற்றும் பிஎம்டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

English summary
Triumph India has launched the 2017 Tiger Explorer XCx at a price of Rs 18.75 lakh. The Tiger Explorer was earlier available in just one variant - The XC, which was then discontinued to make way for a BS-IV model, which is now here.
Story first published: Tuesday, July 25, 2017, 17:48 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark