புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

Written By:

புதிய 300சிசி ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் பைக் மாடல்களில் மிகவும் சக்திவாய்ந்த புதிய பைக் மாடலாக வருவதால் அதிக ஆவல் எழுந்துள்ளது.

புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அகுலா என்ற பெயரில் புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கின் கான்செப்ட் மாடலை டிவிஎஸ் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த பைக் தற்போது தயாரிப்பு நிலையை எட்டியிருக்கிறது.

புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

வரும் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய 300சிசி டிவிஎஸ் பைக்கின் பெயர் விபரம் இப்போது கசிந்துள்ளது. ஆம், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் என்ற பெயரில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

தனது பிரபலமான அப்பாச்சி பிராண்டில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இந்த புதிய 300சிசி பைக்கை டிவிஎஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் மாடலானது, பிஎம்டபிள்யூ கூட்டணியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்.

புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக் நேக்கட் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த புதிய டிவிஎஸ் பைக் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட மாடலாக வருகிறது. டிவிஎஸ் அப்பாச்சி பைக் பிராண்டிற்கு இந்த புதிய பைக் மாடல் மிகவும் சிறப்பு சேர்க்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

ட்ரெல்லிஸ் ஃப்ரேம், வலிமையான தேக அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ளிப் ஆன் ஹேண்டில்பார், பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க், கவர்ச்சியான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட்டுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இந்த பைக்கிற்கு சிறப்பு சேர்க்கும்.

புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

இந்த புதிய பைக் மாடலில் ஒற்றை சிலிண்டரில் இயங்கும் 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

புதிய 300சிசி டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கின் பெயர் கசிந்தது

ஓசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையில் இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் மாடல் உற்பத்தி செய்யப்பட உள்ளது. கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா 300 போன்ற பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: GaadiWaadi

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
The production name of the TVS Akula 310 has been revealed. TVS has trademarked the name of the motorcycle. The Akula is expected to launch by July 2017.
Story first published: Wednesday, May 3, 2017, 17:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark