புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்: சவாலான விலை... !!

Written By:

இளைஞர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை, படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் டிவிஎஸ் நிறுவனம் இந்த புதிய பைக் மாடலை உருவாக்கி இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 312.2சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் பல்வேறு தொழில்நுட்ப சிறப்புகளை பெறறிருக்கிறது. இந்த எஞ்சின் அLிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருப்பதுடன் மிக இலகுவான மாடலாகவும் இருக்கிறது. இந்த பைக் 169.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் அதி நவீன அப்சைடு டவுன் கயபா ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இரண்டு சக்கரங்களிலும் பெட்டல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள், மிச்செலின் டயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆம். மிச்செலின் டயர்களை இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம்தான் உற்பத்தி செய்கிறது.

Recommended Video - Watch Now!
TVS Apache RR 310 Launched In India | FirstLook |Top-speed | Price - DriveSpark
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அவசர சமயங்களில் பிரேக் பிடித்தாலும், இரண்டு டயர்களும் அதிக தரைப்பிடிப்பை வழங்குவதோடு, குறைந்த தூரத்தில் பைக்கை நிறுத்துவதற்கான நுட்பத்தையும் பெற்றிருக்கின்றன. இந்த பைக்கில் 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் நீளவாக்கிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிராக்குகளில் ஓட்டும்போது சுற்றுகளை எவ்வளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்கான லேப் டைமர், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் ஆகியவை பிற முக்கிய அம்சங்கள்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் டிசைனை பெற்றிருப்பதால், 0.26 என்ற அளவிலான டிராக் கோ எஃபிசியன்ட் இருப்பதால் இதன் ரகத்தில் மிகச் சிறப்பான பைக் மாடலாக டிவிஎஸ் தெரிவிக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

ரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்க இருப்பதுடன், இந்த மாதத்திலேயே டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இதன் நேர் போட்டியாளராகவும், விற்பனையில் முன்னிலை வகிக்கும் கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ.2.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கைவிட செயல்திறன் மிக்க, சக்திவாய்ந்த பைக் மாடல் கேடிஎம் ஆர்சி390 பைக் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

English summary
TVS Apache RR 310 Launched In India At Rs 2.05 Lakh: Bookings To Begin Soon & Deliveries By December

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark