2.63 நொடிகளில் 60 கி.மீ வேகத்தை எட்டும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக் விரைவில் அறிமுகம்..!!

Written By:

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள டிவிஎஸ்-ன் அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக் வரும் 6ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

தற்போது இந்த பைக்கின் ஸ்பை படங்கள் கசிந்துள்ள நிலையில், டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக் கூடுதலாக மேட் பிளாக் நிறத்தில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கான டீசரை டிவிஎஸ் வெளியிட்டது. வீடியோவில் சிவப்பு நிறத்தில் இருந்த பைக்கிற்கு வெள்ளை நிறத்திலான பட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

இணையத்தில் வெளியான படங்களில் மேட் பிளாக் நிறத்திலான பைக், கிளாஸ் பிளாக் ரேஸிங் ஸ்டிரைப் கொண்டுள்ளது. பைக்கின் முன்பகுதியில் நம்பர் பிளேட் மற்றும் டிவிஎஸ் அடையாள முத்திரை இடம்பெற்றிருக்கிறது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

ரஷ்லேன் வெளியிட்டுள்ள செய்தியில், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரிவெர்ஸ் இன்கிலைன்டு எஞ்சின் கொண்ட இந்தியாவில் முதல் பைக் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

313சிசி திறன் பெற்ற எஞ்சினை கொண்ட இந்த பைக், அதிகப்பட்சமாக 34.2 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை வழக்கும். மேலும் இதில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

துவக்க நிலையில் இருந்து 60 கி.மீ வேகத்தை 2.63 நொடிகளில் எட்டும் திறன் பெற்ற இந்த பைக், மணிக்கு அதிகப்பட்சமாக 165 கி.மீ வேகத்தில் செல்லும்.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

செயல்திறன், வடிவமைப்பு என பல்வேறு பணிகளில் செம்மையான அமைப்புகளை கொண்ட டிவிஎஸ் ஆர்ஆர் 310 பைக், 25 முதல் 30 கி.மீ மைலேஜ் வழங்க வல்லது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

பைக்கின் முன்பக்க சக்கரத்தில் கயப்பா அப்சைடு டவுன் ஃபோர்க்ஸ், பின் சக்கரத்தில் மோனோஷாக் அப்ஸபர், ஏபிஎஸ் பெற்ற பைப்ரே பிரேக்ஸ் போன்ற ப்ரீமியம் தர அம்சங்கள் இதில் உள்ளன.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

டாப் ஸ்பீடு டைமர், லைவ் மைலேஜ், அவெரேஜ் மைலேஜ், எரிவாயு கொள்ளவு, எஞ்சினின் நிலை, கியர் தேர்வு காடி, சைடு ஸ்டேண்டு அலர்ட், துல்லியமான எரிவாயு கொள்ளவு என அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முழு-டிஜிட்டல் அம்சங்களை பெற்றுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

டிவிஎஸ் ஆர்ஆர் 310 பைக் இலகுவான, வலிமையான மற்றும் வளையும் தன்மை பெற்ற ட்ரெலிஸ் ஃபிரேமில் தயாராகியுள்ளது. எல்.இ.டி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், மிஷிலின் ரேடியல் டயர்கள் ஆகியவை இதில் உள்ளன.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

அப்பாச்சி ஆர் ஆர் 310 பைக், நிச்சயம் டிவிஎஸ் நிறுவனத்திற்கு கேம்-சேஜிங் தயாரிப்பாக இருக்கும். அதற்குரிய அனைத்தும் அம்சங்களும் இதில் உள்ளன.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

செயல்திறன் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்த தேர்வாக இருக்கும் இந்த பைக் ரூ.1.8 லட்சம் முதல் ரூ.2 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர் 310 பைக்..!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 கேடிஎம் ஆர்.சி 390, பெனல்லி 302 ஆர், பஜாஜ் டாமினோர் 400 மற்றும் கேடிஎம் டியூக் 250 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS Apache RR 310 Images, Specs Leaked Ahead Of Launch . Click for Details...
Story first published: Tuesday, December 5, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark