புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் வீடியோ டீசர் வெளியீடு!

Written By:

நாளை மறுதினம் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டீசர் வெளியீடு!

இந்தநிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை அதிகரிக்கும் விதமாக புதிய வீடியோ டீசரை டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. தயாரிப்பு நிலை மாடல் எப்படியிருக்கும் என்பதை ஓரளவு யூகிக்கும் விதத்தில் இந்த டீசர் வந்துள்ளது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் முன்புற டிசைன், சிவப்பு- வெள்ளையிலான கிராஃபிக் டிசைனர் ஸ்டிக்கர், எஞ்சின் கேசிங், முன்புற ஃபேரிங் பேனல்கள் மற்றும் வால் பகுதி குறித்த ஓரளவு தெரிந்து கொள்ளும் விதத்தில் இந்த டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டீசர் வெளியீடு!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முத்தாய்ப்பான விஷயங்களாக இருக்கும். மூவர்ண தேசியக் கொடி விண்ட் ஸ்கிரீனில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டீசர் வெளியீடு!

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களில் இருக்கும் அதே எஞ்சின்தான் புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிலும் பயன்படுத்தப்படுவதால், எஞ்சின் கேசிங் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டீசர் வெளியீடு!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் 313சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அதேவேளை, எஞ்சினில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டீசர் வெளியீடு!

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டீசர் வெளியீடு!

சோதனை ஓட்டங்களின்போது இதுவரை கிடைத்த ஸ்பை ஷாட்டுகளை வைத்து பார்க்கும்போது இந்த பைக் நகர்புறம் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருப்பது புலனாகிறது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் டீசர் வெளியீடு!

டிவிஎஸ் நிறுவனத்தின் மிக பிரபலமான அப்பாச்சி குடும்ப வரிசையில் வரும் மிகவும் சக்திவாய்ந்த பைக் மாடலாக வருவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா 300 மற்றும் பெனெல்லி 302ஆர் பைக் மாடல்களுடன் போட்டி போடும். நாளை மறுதினம் இந்த பைக்கின் அறிமுக விழாவிலிருந்து நேரடித் தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Motor Company is all set to launch the Apache RR 310 in India on December 6, 2017. Ahead of that the company has released a new teaser video to build excitement among the motorcycle enthusiasts in the country.
Story first published: Monday, December 4, 2017, 10:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark