இந்தியாவில் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் வெளிவரும் விவரங்களை வெளியிட்டது டிவிஎஸ் நிறுவனம்..!!

Written By:

இந்தியாவை சேர்ந்த பிரபலமான டிவிஎஸ் நிறுவனம் முற்றிலும் புதிய செயல்திறன் கொண்ட அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக்கை இந்தாண்டு நவம்பரில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. 

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் பைக்கின் உள்கட்டமைப்பு புதிய மாற்றத்துடன், முற்றிலும் புதிய வடிவில் தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

மோட்டார் சைக்கிளை சந்தைப்படுத்த டிவிஎஸ்ஸின் துணை தலைவராக அருண் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தோதாக ப்ரீமியம் மற்றும் சர்வதேச சந்தையை நிர்வகிக்க சித்தார்த் என்பவரும் உடன் உள்ளார்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

இந்திய சாலையில் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் சோதனை செய்யப்பட்ட போது, அது பலரது கண்களை கவர்ந்தது. அதன்மூலமாகவே இந்திய சந்தையில் இந்த பைக் பெரிய எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

ஸ்பை புகைப்படங்கள் மூலம் இந்த பைக்கின் தோற்றம் அனைவரும் தெரியவந்துள்ளதால், அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் வெளிவரும் போது புதிய தோற்றத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

இந்தியாவின் சாலைகளுக்கு ஏற்றவாறு தயாராகியுள்ள இந்த பைக்கின் முன்பக்க சக்கரத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்ஸ் உள்ளது. பின் சக்கரத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளிஸ்டர், ஸ்பிளிட் இருக்கைகள், ஏபிஎஸ் தேர்வு போன்ற தொழில்நுட்ப அளவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் இந்தியாவில் பல நாட்களாகவே சோதனை செய்யப்பட்டு வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

இந்தியாவில் இந்த பைக் கேடிஎம் ஆர்.சி 390, பென்னெலி 302ஆர், கவாஸாகி நிஞ்சா 300 மற்றும் யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர்3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக வெளிவரவுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் அறிமுக தேதி விவரங்கள்..!!

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310எஸ் பைக் இந்தியாவில் ரூ.2 லட்சம் விலை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Read in Tamil: TVS Apache RR 310S will be launched by mid or late-November. Click for Details...
Story first published: Tuesday, September 19, 2017, 17:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark