டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

Written By:

டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பைக்கின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியில் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் முதலாவது மாடலாக பிஎம்டபிள்யூ ஜி310ஆர் என்ற மாடல் வெளியிடப்பட்டது. இந்த பைக் நேக்கட் வகை பைக் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

இந்த நிலையில், இதன் அடிப்படையில் டிவிஎஸ் நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை உருவாக்கியிருக்கிறது. ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் வகை மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த மாடல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் என்ற பெயரில் வர இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் அகுலா கான்செப்ட் மாடல்தான் இப்போது அப்பாச்சி வரிசையில் 300சிசி மாடலாக வர இருக்கிறது. கடந்த ஆண்டிலிருந்து இந்த பைக் தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

இந்த நிலையில், தயாரிப்பு நிலைக்கு மேம்பட்டிருக்கும் இந்த புதிய அப்பாச்சி பைக்ட சோதனை ஓட்டத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை மோட்டோராய்ட்ஸ் தளம் வெளியிட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்சின், ஃபோர்க்குகள், பிரேக் சிஸ்டம், ஃப்ரேம் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டம்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

அதேநேரத்தில், இது ஸ்போர்ட்ஸ் ரக மாடலாக வருவதால், எஞ்சினில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். இதனால், சக்தியை வெளிப்படுத்தும் திறனில் இரு மாடல்களுக்கும் இடையில் சிறிய வித்தியாசம் இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

இந்த பைக்கில் புதிய 310சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஸ்பிளிட் இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் மற்றும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் போன்ற பல சிறந்த அம்சங்களுடன் வருகிறது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கின் புதிய ஸ்பை படங்கள்... விற்பனைக்கு எப்போது?

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய பைக் மாடலை சந்தைக்கு கொண்டு வருவதற்கு டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த பைக்கின் அறிமுக விபரம் குறித்த புதிய தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
Motoroids has spotted the Apache RR 310S which was on a test. The motorcycle was finished in a matte black colour scheme. By looking at the spy shots, we can say that it is a production ready model wearing a camouflaged livery.
Story first published: Tuesday, September 19, 2017, 11:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark