இன்னும் உறுதிப்படுத்தாத பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் விற்பனை

Written By:

டி.வி.எஸ், பி.எம்.டபுள்யூ நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் பைக் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர். உலகளவில் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்த பைக் இம்மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய சந்தையில் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிள் வெளிவருவது, தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது.

புதிய பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம்

பி.எம்.டபுள்யூ தயாரிப்புகளை வடிவமைக்க அந்நிறுவனம் உருவாக்கி வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம் தான் பி.எம்.டபுள்யூ மோட்டர்ராட். ஒவ்வொரு பி.எம்.டபுள்யூவின் தயாரிப்புகள் அனைத்தும் மோட்டார்ராட் வடிவமைத்ததுதான். பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிளையும் மோட்டார்ராட் தான் வடிவமைத்துள்ளது.

புதிய பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம்

ஜி 310 ஆர் பைக்கை மோட்டார்ட் வடிவமைத்திருந்தாலும், ஓசூரில் இருக்கும் டி.வி.எஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் இந்த மாடல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் இந்தியர்களாகிய நமக்கும் ஜி 310 ஆர் பைக் ஒரு பெருமைமிகு அடையாளமே.

புதிய பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருவதாலோ என்னமோ, இங்குள்ள வெறித்தனமான பைக் பிரியர்கள் பலர் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக்கை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக மார்ச் இறுதியில் நிச்சயம் பைக் விற்பனைக்கு வரலாம் என்றும் தகவல்கள் உலாவின.

புதிய பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம்

தற்போது மார்ச் மாதமே முடிவடைந்து வரும் நிலையில் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிள் இந்தியாவில் வெளியிடுவது குறித்து இன்னும் டி.வி.எஸ் மற்றும் பி.எம்.டபுள்யூ நிறுவனங்களிடமிருந்து எந்த அறிவிப்புகளும் இல்லை.

புதிய பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம்

ஓசூரில் தயாராகி வரும் பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக், 313சிசியில் ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த மோட்டார் சைக்கிள் 34 பி.எச்.பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம்

ஒரு செலிஃபிரிட்டி போன்று இந்தியாவில் மதிப்பு பெற்று வரும் இந்த பைக்கின் ஃபோர்குகள் தலைகீழான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் டிஜிட்டல் கருவியால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிளில் தானாக இயங்கும் பிரேக் சிஸ்டமும் (ABS) இடம்பெற்றுள்ளது.

புதிய பி.எம்.டபுள்யூ ஜி 310 ஆர் பைக் வெளிவருவதில் தாமதம்

இந்தியாவில் வெளியானால், கே.டி.எம் டியூக் 390, பாஜாஜ் டோமினோர் 400, மஹிந்திரா மோஜோ ஆகிய பைக் மாடல்களுக்கு கடும் சவால் தரும் என்று எதிர்பார்க்கப்படும் ஜி 310 ஆர் மோட்டார் சைக்கிள், இந்தியாவிற்கு முன்னர் அடுத்த சில வாரங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.

English summary
Before Launching in India TVS Motor Company has commenced exporting the BMW G 310 R from here. The india launch has been delayed due to various reasons.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark